விமான நிலையத்தில் நேரத்தை கடத்த டிப்ஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்
தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் கீர்த்தி.
அந்தப் படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் அவரை பலரும் பார்த்து ரசித்தது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தான்.
அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் பெரிய இடமாகத்தான் இருந்தது. விஜய், ரஜினிகாந்த் என உச்ச நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்து தேசிய விருது பெரும் அளவிற்கு உயர்ந்தார்.
கீர்த்தி சுரேஸ் கொடுத்த டிப்ஸ்
அந்தவகையில் கீர்த்தி சுரேஸ் விமான நிலையத்தில் விமான தாமதங்களின் போது நேரத்தை கடப்பது குறித்து தனது கண்ணோட்டத்தை வழங்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் ஒரு கதையைப் பகிர்ந்துள்ளார்.
ஆச்சரியப்படும் விதமாக, அவர் கொச்சி விமான நிலையத்தில் உள்ள கழிவறைக்குள் ஒரு வீடியோவை பதிவுசெய்துள்ளார்.
விமான நிலைய கழிவறையில் படமாக்கப்பட்ட பூமராங், கீர்த்தி போஸ் கொடுப்பதையும், தன் நகங்களைக் காட்டுவதையும் காட்டுகிறது.
வீடியோவில், வசதியான மற்றும் ஸ்டைலான ஊதா நிற கோ-ஆர்ட் செட் அணிந்து, எப்போதும் போல் தனது தோற்றத்தை உயர்த்திக் காட்டியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் விமானம் தாமதமாகும் போது விமான நிலையத்தில் எப்படி நேரத்தை கடத்தலாம் என டிப்ஸ்களை பகிர்ந்து கொண்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் கொச்சி விமான நிலையத்தில், உள்ள பாத்ரூமில் தனது ரசிகர்களுக்காக இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோ மூலம் உங்களை நீங்களே அதிகம் நேசிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
தென்னிந்திய மொழிகளில் நிலையான இடத்தை பிடித்துவிட்ட கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக தன்னுடைய பாலிவுட் அறிமுகத்திற்கும் தயாராகி உள்ளார்.
வருண் தவானுக்கு ஜோடியாக தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். வருண் தவானின் 18வது படமாக இப்படம் உருவாகி வருகிறது.
ஆக்ஷன் எண்டெர்டெயினராக உருவாகும் இந்த படத்தில், கீர்த்தி கவர்ச்சிகரமான வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |