திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் : பரபரப்பில் ரசிகர்கள்
தற்போது பிரபல இயக்குநராக வலம் வருபவர் தான் லியோ திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ். 'மாநகரம்' படத்தின் மூலம் வெள்ளி திரையில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், முதல் படத்திலேயே ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் இவரின் படங்கள் மீது ரசிகர்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர்.
அதன் பின்னர் அவர் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம், போன்ற படங்கள் அடித்தடுத்து சூப்பர் ஹிட் கொடுத்தது. இதன் காரணமாக அவரின் திரைப்படங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
இயக்குநர் லோகேஷ்
இறுதியாக இவர் இயக்கத்தில் தளபதி விஜய் மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் திகதி வெளியாகி வெற்றி நடை போட்டு வருகின்றது.
வெளியான ஐந்து நாட்களிலேயே, சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் 200 கோடி மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில் தளபதியின் மலையாள ரசிகர்கள் லியோ படத்தை சிறப்பிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை, பாலக்காட்டில் உள்ள அரோமா திரையரங்கில் ஏற்பாடு செய்திருந்த நிலையில், இதில் கலந்துக்கொள்வதற்காக லோகேஷ் கனகராஜும் சென்றுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எதிர்பாராத விதமாக காலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக அவர், உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயம் சினிமா வட்டாரங்கள் மத்தியிலும் தளபதி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் போது லோகேஷ் கனகராஜ் எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |