திருமண நாள் நெருங்கும் வேளையிலும் இப்படியா? கீர்த்தி சுரேஷ் அட்டைப்படத்திற்கு கொடுத்த ஹொட் போஸ்
நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல இதழ் ஒன்றின் அட்டைப்படத்துக்காக செம கிளாமரான ஆடையில் ஹொட் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரவாகி வருகின்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
2015 இல் வெளியான "இது என்ன மாயம்" என்ற திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தான் இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.
அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் பெரிய இடமாகத்தான் இருந்தது. அதை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சாமி - 2, அண்ணாத்த, சர்கார் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகின்றார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் "தெறி" படத்தின் இந்தி ரீமேக்கான "பேபி ஜான்" படத்தின் மூலமாக இந்தி சினிமாவிலும் அறிமுகமாகிறார்.
அது மட்டுமன்றி கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து பல தகவல்கள் வெளியாகிய வேளையில், டுவிட்டர் பக்கத்தில் புகைப்படமொன்றை வெளியிட்டு அண்மையில் திருமணத்தை வதந்தியை உறுதிசெய்திருந்தார்.
கீர்த்தி சுரேஷின் திருமண பத்திரிக்கை இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
கீர்த்தி சுரேஷ், ஆண்டனி தட்டில் இருவரும் டிசம்பர் 12ம் திகதி கோவாவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல இதழ் ஒன்றிற்காக கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |