டொராண்டோ திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் Stunning போட்டோஷூட்!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டிற்கு முன்பாகவே, சர்வதேச அளவில் இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் (Toronto International Film Festival) ‘டோரதி’ திரைப்படம் திரையிடப்பட்டதுடன், அங்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
இந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ், தனது அழகும், ஸ்டைலும் மிளிரும் வகையில் எடுத்துக்கொண்ட Stunning போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வித்தியாசமான லுக்கில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன.







