திருமணத்திற்கு முன் ஹைதராபாதில் கீர்த்தி சுரேஷின் பரபரப்பு பேச்சு! அப்படியென்ன கூறினார்?
கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை இந்த டிசம்பரில் கோவாவில் ஒரு தனியார் விழாவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் ஹைதராபாத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் தனது சினிமா வாழ்க்கை பற்றி பேசியுள்ளார்.
கீர்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தனது நடிப்பு திறமையால் பல ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைத்துள்ளார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய நடிகையான இவர் தனது நீண்ட நாள் காதலரை டிசம்பரில் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கீர்த்தி தனது சினிமா நடிப்பு வாழ்க்கை பற்றி கூறியுள்ளார். அவர் கூறியது 'நான் எப்போதும் விருது பெற்ற நடிப்பை வழங்கக்கூடிய படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல, எனது சிறந்ததை வழங்க முயற்சிக்கிறேன்.
அதிர்ஷ்டவசமாக, சில கதாபாத்திரங்கள் சிறப்பாக அமைந்தது மற்றும் எனது இயக்குனருக்கு நன்றி" என கூறினார். தற்போது இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Keerthy About Her Filmography 🥰🖤@KeerthyOfficial #Keerthy pic.twitter.com/t6DzXJrIFA
— keerthy Suresh Tweets (@KeerthySureshTM) November 24, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |