பாலிவுட் போனதும் மொத்தமாக மாறிய கீர்த்தி சுரேஷ்... குத்தாட்டம் போடும் காணொளி வைரல்
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் திருமணம் என்ற தகவல் சில தினங்களாக இணையத்தை ஆக்கிரமித்து வரும் நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் ட்ரெண்டிங் உடையில் குத்தாட்டம் போடும் காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கீர்த்தி சுரேஷ்
இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தான் இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.
அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் பெரிய இடமாகத்தான் இருந்தது. அதை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சாமி - 2, அண்ணாத்த, சர்கார் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகின்றார்.
கீர்த்தி ஹிந்தியில் அறிமுகம் ஆகும் பேபி ஜான் படம் பற்றி ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது. கிளாமர் இந்த படத்தில் இருந்து Nain Matakka என்ற முதல் சிங்கிள் பாடல் 4 நாளை நவம்பர் 25ஆம் திகதி வெளியாகவுள்ளது.
அதை வீடியோ வெளியிட்டு நடிகர் வருண் தவான் அறிவித்திருக்கின்றார். குறித்த காணொளியில் கீர்த்தி சுரேஷ் ட்ரெண்டிங்கான குட்டை ஆடையில் நடனம் ஆடியிருக்கின்றார்.
அதனை பார்த்த இணையத்தளவாசிகள் தென்னிந்திய படங்களில் ஹோம்லியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் போனதும் தாராள கவர்ச்சி காட்டுகிறார் என விமர்சித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |