கீர்த்தி சுரேஷ் பெயர் கூட அங்கு தெரியாதா? என் பெயர் கீர்த்தி தோசா அல்ல... வைரலாகும் காணொளி
பேபி ஜான் திரைப்பட புரமோஷன் நிகழ்வில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷிடம், ‘கீர்த்தி தோசா’ என தென்னிந்திய உணவுகளை குறிப்பிட்டு பாலிவுட் போட்டோகிராஃபர்கள் கிண்டல் செய்த காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்ஹிந்தியில் அறிமுகமாகியுள்ள பேபி ஜான் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகின்றது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆன தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தான் பேபி ஜான் திரைப்படம்.
வருண் தவான் நடிப்பில் அட்லீயின் தயாரிப்பில் இயக்குநர் காளிஸ் இயக்கத்தில் உருவாகிய இந்த திரைப்படம் கடந்த 25 ஆம் திகதி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
அதில் கீர்த்தி சுரேஷ் தான் ஹீரோயினாக நடித்திருக்கின்றார். இந்நிலையில் பேபி ஜான்’ படத்தின் புரமொஷனல் நிகழ்வில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷிடம், ‘கீர்த்தி தோசா’ என தென்னிந்திய உணவுகளை குறிப்பிட்டு பாலிவுட் போட்டோகிராஃபர்கள் கீர்த்தி சுரேஷ் என்ற பெயரை கலாய்த்துள்ளனர்.
இதனை சிரித்துக்கொண்டே சமாளித்த கீர்த்தி சுரேஷ், ‘நான் கீர்த்தி சுரேஷ் ... கீர்த்தி தோசா அல்ல’ என கூறினார். குறித்த காணொளி தங்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
Casual Racism Alert: Northern Paparazzi Refers to Keerthy Suresh as 'Dosa' pic.twitter.com/MtgESgD4yp
— Shagun Yadav (@CodeAndConsole) December 30, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |