உங்க குழந்தைகளும் கீரை சாப்பிட மாட்டாங்களா? அப்போ கீரை பக்கோடா செய்து கொடுங்க
பொதுவாகவே கீரை என்றதுமே அனைவரும் முகம் சுழிப்பதற்கு காரணம் அதன் சுவை சற்று கசப்புத்தன்மை கலந்ததாக இருப்பது தான்.
நாம் தினமும் கீரை வகைகளை உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். கீரைகளில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ரத்தசோகைக்கு சிறந்த தெரிவாக இருக்கும்.
மூல நோய் உள்ளவர்கள் கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நோய் குணமாகும். மேலும் நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
இத்தனை மருத்துவ குணம் கொண்ட கீரையை குறிப்பாக குழந்தைகளை சாப்பிட வைப்பது மிகவும் சவாலான விடயமாகவே இருக்கின்றது.
இதற்கு தீர்வு கொடுக்கும் வகையில் கீரை பக்கோடா செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எளிமையான முறையில் எப்படி கீரை பக்கோடா செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரைக்கீரை/சிறுகீரை - 1 கைப்பிடி
உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள்- 1/4தே.கரண்டி
கரம் மசாலா - 1/2 தே.கரண்டி
பெருங்காயத் தூள் - சிறிது
கடலை மாவு - 5 மேசைக்கரண்டி
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
எள்ளு - 1 தே.கரண்டி
ஓமம் - 1 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் கீரையை நன்றாக சுத்தம் செய்து கழுவி பொடியாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
பின்னர் உருளைக்கிழங்குகளை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, அதைத் துருவி நீரில் போட்டு தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய கீரை, துருவிய உருளைக்கிழங்கு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
அதன் பின்னர் கடலை மாவு, அரிசி மாவு, எள்ளு, ஓமம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கைகளால் நன்கு பிசைந்துக் கொள்ள வேண்டும்
அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும், பிசைந்து வைத்துள்ள வேண்டும்.
இந்த கலவையை சிறிது எடுத்து உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான கீரை பக்கோடா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |