நோய் எதிர்ப்பு சக்தி தாறுமாறாக எகிற வேண்டுமா? சுண்டைக்காய் சட்னியின் அற்புதம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுண்டைக்காயில் சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சுண்டைக்காய் பல சத்துக்களை கொண்டுள்ளதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடம்பில் உள்ள புழுக்களை அழிக்கும் ஆற்றலைக் கொண்ட இதில் சட்னி எவ்வாறு வைத்து சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சுண்டைக்காய் - 1 கப்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 7-8
சின்ன வெங்காயம் - 10-12
தேங்காய் - 2 துண்டு (துருவியது)
கொத்தமல்லி - சிறிது
தக்காளி - 1 (நறுக்கியது)
வரமிளகாய் - 4
புளி - சிறிய துண்டு
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையன அளவு
தாளிப்பதற்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
சுண்டைக்காயை அதன் காம்புகளை நீக்கி சுத்தம் செய்துவிட்டு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அதனுள் சுண்டைக்காயை சேர்த்து வதக்க எடுக்கவும்.
பின்பு அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம், துருவிய தேங்காய், கொத்தமலலி சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து நறுக்கிய தக்காளி, வரமிளகாய், சிறிய துண்டு புளி சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு வதக்கி இறக்கவும்.
பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பான அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால் சுவையான சுண்டைக்காய் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |