வீட்டில் இந்த பொருட்கள் இருக்கிறதா? சந்தேகம் வேண்டாம் பணமே வராது
வீட்டு வாஸ்து படி குறிப்பிட்ட சில பொருட்கள் வீட்டில் இருந்தால் சந்தேகத்திற்கு இடமின்றி வீட்டிற்கு பணம் வராது என கூறப்படுகின்றது.
வாஸ்து
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. எந்த விஷயம் செய்தாலும், அதை வாஸ்து படி தான் செய்வார்கள். அதாவது வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, புது கடை வாங்குவது என எதுவாக இருந்தாலும் வாஸ்து பார்ப்பார்கள்.
இதை சிலர் மூட நம்பிக்கை என கூறினாலும் அறிவியல் படி நம்மை சுற்றியுள்ள சில செட்ட சிந்தனைகளை மாற்றக்கூடிய சக்தி இந்த வாஜ்து பரிகாரங்களுக்கு என்று கூறலாம். இந்த உலகத்தில் இருக்கும் எல்லா பொருட்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு உள்ளது.
அந்த வகையில் வீட்டில் பணம் தங்கி நிற்க பண வரவு அதிகமாக வர வீட்டில் சில வாஸ்து பரிகாரங்கள் செய்வார்கள். அப்படி செய்யும் போது வீட்டில் பண வரவை உண்டாக்கும் நற்சக்திகள் அதிகரிக்கும் என நம்புகிறார்கள்.
ஆனால் நமக்கே தெரியாமல் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் பண வரவை தடுக்கும் துரதிர்ஷடம் கொண்டவையாக இருக்கிறது. அது எந்த பொருட்கள் என்பதை பார்க்கலாம்.
பழைய காலண்டர் | வாஸ்துபடி, வீட்டில் பழைய காலண்டர் இருந்தால் துரதிஷ்டத்தை ஈர்க்கும். வீட்டில் தினமும் கிழிக்கும் கலண்டர் இருந்தால் அதை கிழிக்க வேண்டும். அப்படி இல்லையேல் முடிந்துபோன ஆண்டுக்குரிய கலண்டர் வீட்டில் வைத்திருக்க கூடாது. இப்படி செய்தால் வீட்டில் செல்வம், அதிர்ஷ்டம் பெருகிக்கொண்டே இருக்கும். நிதி அடிப்படையில் வெற்றியை காண்பீர்கள். |
ஓடாத கடிகாரம் | உங்கள் வீட்டில் ஓடாத அல்லது உடைந்த கடிகாரம் இருந்தால் அதை உடனே தூக்கிப் போடுங்கள். ஏனெனில் வாஸ்து படி, அவை உங்கள் வீட்டிற்கு துரதிஷ்டத்தையும், துன்பங்களையும் கொண்டு வரும். எனவே என்ன தான் நமக்கு ஒரு பரிசாக கிடைத்த கடிகாரம் என்றாலும் அது ஓடாத கடிகாரம் என்றால் அதை உடனே குப்பையில் தூக்கி போட வேண்டும். |
உடைந்த நாற்காலி | உடைந்த நாற்காலி வீட்டில் இருந்தால் நெகடிவ் எனர்ஜியை ஈர்க்கும் என்று வாஸ்து சொல்லுகின்றது. இதனால் வீட்டில் நிதி பற்றாக்குறை பண இழப்பு தேவையற்ற செலவுகள் ஏற்படும். வீட்டில் களஞசியப்படுத்தும் அறை இருந்தாலும் அந்த அறையில் கூட இந்த உடைந்த நாற்காலியை வைக்க வேண்டாம். |
காய்ந்த செடிகள் | உங்கள் வீட்டின் உள் அல்லது வெளியே காய்ந்த அல்லது பட்டு போல செடிகள் இருக்கக் கூடாது. ஏனெனில் இவை உங்கள் வீட்டிற்கு துரதிர்ஷ்டம், பணம் கஷ்டத்தை கொண்டு வரும். முடிந்த வரை வீட்டு சுற்று புறத்தில் செடிகளை சாக விடாமல் பார்த்து கொள்வது முக்கியம். அப்படி இல்லையேல் அந்த செடிகளை அவ்விடத்தில் இருந்து வெளியேற்றலாம். |