வீட்டில் பணத்துக்கு பஞ்சமே இருக்க கூடாதா? அப்போ வாசலில் இந்த பொருட்களை வைங்க
பொதுவாகவே இந்து சாஸ்திரத்தில் நாம் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் செய்யப்பட வேண்டிய விதிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை முறையாக பின்பற்றியதன் காரணமாகத்தான் நமது முன்னோர்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியமாகவும் செல்வசெழிப்புடனும் வாழ்ந்தார்கள்.
ஆனால் தற்காலத்தில் இதன் முக்கியத்துவம் தெரிந்திருந்தும் நம்மில் பலரும் இவற்றை பின்பற்ற மறுக்கின்றோம்.அதனால் வாழ்வில் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது.
வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் வீட்டின் பிரதான கதவு மகிழ்ச்சி மற்றும் குடும்பத்தின் செழிப்பின் சின்னமாக கருதப்படுகின்றது.அது வாஸ்து சாஸ்திரத்தில் வாஸ்து கதவு என்று அழைக்கப்படுகிறது. இதனை முறையாக பராமரிப்பதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும்.
இது எப்படி அமைக்கப்பட்டுள்ளதோ குடும்ப வாழ்க்கை அப்படி அமையும் என்பது ஐதீகம். எனவே அதை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். பிரதான கதவை சுத்தம் செய்யாவிட்டால், லட்சுமி வீட்டிற்குள் நுழைய மாட்டார் என்பது நம்பிக்கை.
இந்த பொருட்களை வீட்டின் பிரதான கதவுக்கு அருகில் வைத்தால் பண பிரச்சனையே வராது என்கின்றனர் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
செல்வத்தை அதிகரிக்கும் பொருட்கள்
ஸ்வஸ்திக் சின்னம்
வீட்டின் பிரதான கதவின் இருபுறமும் சிவப்பு நிற ஸ்வஸ்திக் சின்னத்தை எழுதுவது மிகவும் நல்லது. உங்களால் ஒவ்வொரு நாளும் எழுத முடியாவிட்டால், உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க ஸ்டிக்கர் அல்லது பெயிண்ட் மூலமாக அந்த ஸ்வஸ்திக் சின்னத்தை வைக்கலாம்.
கலசம்
வீடுகளில் பூஜையின் போது மட்டும் கலசம் வைப்பது வழக்கம். ஆனால் வீட்டின் பிரதான கதவுக்கு அருகில் கலசத்தை வைத்தால், அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் என்பது நம்பிக்கை.
துளசி
துளசி செடியை வீட்டில் வைத்திருப்பது மிகவும் நல்லது. இது மிகப்பெரிய அதிர்ஷடத்தை தரும் எனக் கூறப்படுகிறது. பிரதான கதவுக்கு அருகில் அதை நட்டால், அது உங்கள் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
பூக்கள்
வீட்டின் பிரதான கதவுக்கு அருகில் பூக்களை வைத்தால் செல்வம் குறையாது என்று கூறப்படுகிறது. மேலும் வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.பூக்களுக்கு நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் தன்மை அதிகமாக காணப்படுகின்றது. இதனால் வீட்டில் வசிப்பவர்களின் எண்ணங்களில் நல்ல மாற்றம் ஏற்படும்.
விநாயகர் சிலை
அனைத்து தடைகளையும் கடக்கும் கடவுள் விநாயகர். எனவே வீட்டின் கதவுக்கு அருகில் விநாயகர் சிலை இருந்தால் வீட்டில் இருக்கும் தடைகள் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். குறிப்பாக வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செல்வ செழிப்பும் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |