வாழ்க்கையில் மறந்து கூட இந்த தவற செய்யாதீங்க.. பக்க விளைவுகள் பயங்கரமாக இருக்குமாம்- சாணக்கிய நீதி
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், ஒரு நபரை சரியான பாதையில் வழிநடத்திச் செல்வதற்கு என்னென்ன வழியில் முயற்சிக்க வேண்டும் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
வாழ்க்கையை சிதைக்கும் தவறுகள்
1. சாணக்கிய நீதி கூற்றின் படி பிரச்சினை காலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சவால் சரியாக சந்திக்க தயாராகி விட்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். ஒரு சிறிய தவறு கூட பெரிய சேதத்திற்கு வழிவகுக்கும். எனவே எப்போதும் முன் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
2. ஒருவருக்கு நெருக்கடியில் இருக்கிறார் என்றால் அதிலிருந்து வெளியே வருவதற்கு ஒரு சில உத்திகள் தேவை என ஆச்சார்யா சாணக்கியர் கூறுகிறார். ஆபத்துக் காலத்தில் வியூகம் இல்லாமல் செயல்படுபவர்களுக்கு விரைவில் நஷ்டம் வந்து சேரும் மற்றும் நெருக்கடியான காலங்களில் ஒவ்வொரு படியிலும் கவனமாக கால் வைக்க வேண்டும்.
3. என்ன பிரச்சினை வந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து விட்டால் எப்படியான பிரச்சினை வந்தாலும் பார்த்து கொள்ளலாம். உடல்நிலையில் கவனம் இல்லாவிட்டால் என்ன இருந்தும் அது பயனில்லை. மன வலிமை மற்றும் உடல் வலிமை தான் சவால்களை சந்திக்க வழிச் செய்கிறது.
4. எப்போதும் கடந்த காலங்களை நினைத்து கவலை கொள்வது வீண் என சாணக்கியர் கூறுகிறார். ஒரு முறை செய்து அது தவறு என தோன்றி விட்டால் அதே தவறை மீண்டும் செய்வது முட்டாள்தனம். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நிகழ்காலத்தை எப்படி மேம்படுத்தலாம். எதிர்காலத்தை எப்படி வாழலாம். இது போன்று சிந்தனை அவசியம் என சாணக்கியர் கூறுகிறார்.
5. சாணக்கியரின் கூற்றுப்படி, எதிரியை எப்போதும் பலவீனமாக நினைக்கக் கூடாது. எதிரிகளை தோற்கடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பலத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அவசரப்படாமல் பொறுமையை கையில் எடுத்து போராட வேண்டும். நினைத்தது நடக்க வேண்டும் என்றால் முடிந்தளவு பொறுமையாக இருக்கலாம் அதில் எந்தவித தவறும் இல்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |