படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய டிராகன் பட நடிகை... வைரலாகும் காணொளி!
நடிகை கயாடு லோஹர் படப்பிடிப்பு தளத்தில் தனது 25 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய காணொளியை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கயாடு லோஹர்
ட்ராகன் படத்துக்கு பின்னர் சென்சேஷனல் நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் கயாடு லோஹர்.
மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு அந்த படங்களில் கிடைக்காத வரவேற்பு சமீபத்தில் வெளிவந்த டிராகன் படத்தின் மூலம் தழிழ் ரசிகர்களால் இவருக்கு கிடைத்தது.
டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
அதனை தொடர்ந்து அதர்வாவுடன் இதயம் முரளி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது 25 ஆவது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கயாடு லோஹர் கொண்டாடியுள்ளார்.
படக்குழுவினர் அனைவரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் இசையமைப்பாளர் தமன் பரிசு ஒன்றையும் கொடுத்துள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகிவருவதுடன் கயாடு லோஹருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.
All smiles and a cheerful vibe as we celebrate Kayadu Lohar's birthday on the sets of #IdhayamMurali 🎁
— DawnPictures (@DawnPicturesOff) April 11, 2025
Wishing her a wonderful year ahead @11Lohar @Atharvaamurali @MusicThaman @AakashBaskaran @natty_nataraj @PreityMukundan @Dop_Sai @RakshanVJ @JustNiharikaNm @Actor__SUDHAKAR… pic.twitter.com/4y1ZIwjV6o
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |