நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்லை... ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்து பேசிய கயாடு லோஹர்!
சென்சேஷனல் நாயகியாக வலம் வரும் நடிகை கயாடு லோஹர் ரிலேஷன்ஷிப் குறித்த வெளிப்படையாக பேசியுள்ள விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கயாடு லோஹர்
ட்ராகன் படத்துக்கு பின்னர் சென்சேஷனல் நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் கயாடு லோஹர்.
மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர், சமீபத்தில் வெளிவந்த டிராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்துள்ளார்.
முதல் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுக்கொடுத்துள்ளது. டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
அதனை தொடர்ந்து அதர்வாவுடன் இதயம் முரளி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமன்றி சிம்புவின் 49வது திரைப்படத்திலும் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தற்போது கயாடு தமிழ் சினிமாவில் பிஸியான கதாநாயகிகளில் ஒருவராக மாறியுள்ளார்.
இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட போது ரிலேஷன்ஷிப் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கயாடு லோஹர் கொடுத்த நெத்திய பதில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றது.
அவர் ரிலேஷன்ஷிப் பற்றி குறிப்பிடுகையில் "இன்றைய தலைமுறை புதுப்புது வார்த்தைகளுக்கு புதுப்புது அர்த்தங்களை கண்டுபிடித்து வருகிறார்கள். எனக்கு தெரிந்து 'ஷிப்' என்றால் கப்பல் தான். நீங்கள் கூறுவது போல் இப்போது ரிலேஷன்ஷிப், சிச்சுவேஷன்ஷிப் என பல 'ஷிப்'கள் வந்துவிட்டன.
நீங்கள் நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்லை. நான் ரொம்ப நல்ல பொண்ணு. நான் இப்போது எந்த ஒரு ரிலேஷன்ஷிப்பிலும் இல்லை. அவ்வளவு எளிதாக எதிலும் சிக்கிக்கொள்ள மாட்டேன்" என குறிபிட்டுளார். இவரின் தெறி பதில் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |