நியூயார்க்கில் அனிருத் உடன் ஜோடியாக சுற்றும் காவ்யா மாறன் - வைரலாகும் காணொளி
இசையமைப்பாளர் அனிருத்தும், கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனும் நியூ யார்க்கில் ஜோடியாக வலம் வந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
அணிருத்
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். விஜய், அஜித், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களை கைவசம் வைத்துக் கொண்டு பிசியாக வலம் வந்தாலும், இவர் அவ்வப்போது காதல் சர்ச்சைகளிலும் சிக்குவது உண்டு.
அனிருத் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் நடிகை ஆண்ட்ரியாவை காதலித்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் லீக் ஆகி வைரலானது.

பின்னர் சில காரணங்களால் அனிருத்தும், ஆண்ட்ரியாவும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர். இதன் இன்னும் சில நடிகைகளுடன் அனிருத் காதலில் இருந்ததாக வதந்திகள் வந்தன.
அது ஒரு பக்கம் இருக்க இந்த ஆண்டு அனிருத்தும், காவ்யா மாறனும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் உலா வந்தன. அப்போது வதந்திகளை பரப்பாதீர்கள் என ட்வீட் போட்டு முற்றுப்புள்ளி வைத்திருந்தார் அனிருத்.

வைரல் காணொளி
இந்த நிலையில், தற்போது அனிருத்தும், காவ்யா மாறனும் ஜோடியாக நியூ யார்க்கில் சுற்றி திரியும் ஒரு காணொளி வைரலாகி வருகின்றது. இது நியூ யார்க்கில் பிரபலமான ஒரு யூடிபரின் வ்லோக்கில் சிக்கி உள்ளது.
இதை பார்த்த நெட்டிசன்கள் என்ன ஒன்னுமில்லை னு சொல்றீங்க இப்ப என்னடா நடக்குது அங்க என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
యూకే ట్రిప్లో మ్యూజిక్ డైరెక్టర్ అనిరుధ్, సన్రైజర్స్ ఓనర్ కావ్య మారన్...పెళ్లి కన్ఫామ్ చేసినట్లేనా?#Anirudh #kavyamaran #Kollywood pic.twitter.com/KSj9enimQ7
— Tollywoodtopics (@filmytopics) November 13, 2025
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |