கவின் மனைவியின் முதல் பதிவு... லொஸ்லியாவை கடுப்பேற்ற செய்தாரா?
திருமணத்திற்குப் பின்பு கவின் தனது இன்ஸ்டாகிராமில் திருமண காணொளியினை வெளியிட்டுள்ள நிலையில் அவரது மனைவி மோனிகா வெளியிட்ட பதிவு லொஸ்லியாவை சீண்டியுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கவின் திருமணம்
நடிகர் கவின் அவரது நீண்ட நாள் காதலியான மோனிகாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்த நிலையில், புகைப்படம் மற்றும் காணொளி வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது கவின் லொஸ்லியாவைக் காதலித்து வந்த நிலையில், வெளியே வந்த பின்பு இருவரும் பிரிந்துவிட்டனர்.
பின்பு இவர்களின் காதல் குறித்து அடுதடுத்து கேள்வி எழுந்தும் எந்தவொரு பதிலும் கூறாமல் இருந்தனர். இந்நிலையில் கவின் தனது நீண்ட நாள் காதலியான மோனிகாவை திருமணம் செய்துள்ளார்.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், மோனிகா டேவிட், லாஸ்லியாவின் தோழி என்பது தான். அவர் இவரின் ஸ்டைலிஷ்டாகவும் பணியாற்றி இருக்கிறார் என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் கவின் தனது இன்ஸ்டாகிராமில் திருமண காணொளியினை பதிவிட்டுள்ளார். இதே போன்று அவரது மனைவி மோனிகாவும் இன்ஸ்டா பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
ஆம் புதுதாலியுடன் செல்ஃபி ஒன்றை காரில் இருந்தபடி எடுத்து, 'Officially Mrs. K' என்ற கேப்ஷனுடன் மகிழ்ச்சியாக இதைப் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்தை கவின் ரசிகர்கள் பகிர்ந்து திருமண வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் லாஸ்லியாவுக்கு பதிலடி கொடுக்கவே மோனிகா இந்த பதிவை போட்டிருப்பதாக ஒப்பிட்டு வருகின்றனர்.
திருமண வீடியோவைப் பகிர்ந்துள்ள கவின், ‘என் தோழியை கரம் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி’ என நெகிழ்ச்சியாகப் பதிவு செய்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |