எப்பவும் ஒரே மாதிரி சட்னியா ? இட்லி,தோசைக்கு அசத்தலான கத்தரிக்காய் துவையல்!
சந்தையில் கத்தரிக்காயின் விலை குறைந்தால் வீடுகளில் எல்லா கறிகளிலும் கத்திரிக்காய் இருக்கும்.
இதுவரையில் நாம் கத்திரிக்காயை பயன்படுத்தி சாம்பார், சட்னி என்று செய்து சுவைத்திருப்போம்.
ஆனால் இட்லி, தோசைக்கு கத்திரிக்காயை எள்ளு விதைகளுடன் சேர்த்து கத்திரிக்காய் எள்ளு துவையல் செய்து சுவைக்கலாம்.
அந்த வகையில் கத்தரிக்காய் துவையல் எப்படி செய்வது என தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
* கத்திரிக்காய் - 500 கிராம்
* தண்ணீர் - 1/4 கப் வதக்கி
அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
* எள்ளு விதைகள் - 1/4 கப்
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
* நெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்
செய்முறை
* முதலில் துவையலுக்கு தேவையான கத்திரிக்காய்களை எடுத்து குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும். வெந்ததும் தோல் நீக்கி ஒரு சிறிய கோப்பையில் போட்டு வைக்கவும்.
*பின்னர் சுத்தமான மிக்ஸி சாரில் கத்தரிக்காயை போட்டு நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளு விதை போட்டு வறுத்தெடுத்து அதனை பேப்பரில் கொட்டி காய விட வேண்டும்.
* காய்ந்த எள்ளு விதைகளை காய்ந்த மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* இதனை தொடர்ந்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
* வெங்காயம் வதங்கிய பின்னர் தக்காளி, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதங்க விடவும்.
*அரைத்து வைத்திருக்கும் கத்திரிக்காய் பேஸ்ட்டை தாளிப்பில் சேர்த்து சரியாக இரண்டு நிமிடங்கள் வரை வதங்க விட வேண்டும்.
* இறுதியாக நெய் விட்டு, எள்ளு பேஸ்ட்டை போட்டு கிளறி இறக்கினால் சுவையான கத்தரிக்காய் துவையல் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |