நடிகைகள் போல் தேவதையாய் ஜொலிக்க “கஸ்தூரி மஞ்சள்”
கஸ்தூரி மஞ்சள் என்றும் அறியப்படும் காட்டு மஞ்சள் தமிழர்கள் உணவுகளில் பரவலாக பயன்படுத்தும் ஒரு பொருள்.
இந்த கஸ்தூரி மஞ்சள் பல்வேறு மருந்திலும், ஒப்பனைப் பொருட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அழகை அதிகரிக்கும் ஒரு இயற்கை மூலப்பொருளாக இந்த மஞ்சள் அறியப்பட்டு வருகிறது. மஞ்சளின் தேவை ஒவ்வொரு வீட்டிலும் வெகுவாக அதிகரித்துள்ளது.
சர்க்கரை நோயாளிகளே… உங்களுக்கு சத்தான கம்பு சாம்பார் சாதம் செய்வது எப்படினு தெரியுமா?
இன்று நாம் கஸ்தூரி மஞ்சள் பெண்களின் அழகிற்கு எப்படி பயன்படும் என்பதை தெரிந்து கொள்ளுஙகள்.
ஏலக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்க… பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளி தருமாம்!
கஸ்தூரி மஞ்சளின் நன்மைகள்
- கண்களை சுற்றி கருவளையம் இருந்தால் அந்த பகுதியை சுற்றி கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்தினால் கட்டாயம் அதனை குறைக்க உதவும்.
- கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்துவது வயதான அறிகுறிகளின் தோற்றத்தையம் முகத்தில் தெரியும் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது.
- இதில், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், கஸ்தூரி மஞ்சள் முகப்பருவை எதிர்த்துப் போராட உதவும்.
- கஸ்தூரி மஞ்சளை தனியாகவோ அல்லது தேன் அல்லது துளசி போன்ற பொருட்களுடன் கலந்து ஃபேஸ்பேக்காக பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தும் போது அவை முகப்பரு வடுக்களை அகற்ற உதவும்.
மருந்தாகும் மஞ்சள்
மஞ்சள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். உடலில் அரிப்பு ஏற்பட்டால், மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து, அந்த இடத்தில் தேய்த்துவந்தால், அரிப்பு குணமாகும்.
சிலருக்குத் தொடையில் சூடுக்கட்டிகள் ஏற்படும். அரைத்த மஞ்சளை, நல்லெண்ணெயோடு சேர்த்துத் தடவி வந்தால், மெல்ல மெல்ல கட்டி சரியாகும்.
வெயிற்காலத்தில் ஏற்படும் அம்மை தழும்பு மறைக்க இதோ சில இயற்கை வைத்தியம்..!
சருமப் பாதிப்பு இருப்பவர்கள், கஸ்தூரி மஞ்சளோ அல்லது காப்பு மஞ்சளோ உபயோகிப்பது நல்லது.
உடலில் ஒவ்வாமை ஏற்பட்டால், ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும் `ஹரித்ரா காண்டம்’ என்ற மஞ்சளில் தயாரித்த மருந்தை வாங்கித் தடவிவந்தால் பிரச்னை தீரும்.
சரும பிரச்சனைகளை தீர்வு தரும் கஸ்தூரி
பெண்கள் இந்த மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும்.
கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.
சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாராமல் தடுக்கும்.
இந்த மஞ்சளையும். பூலாங்கிழங்கையும் சம அளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். இதனை தினமும் செய்து வரவேண்டும்.
மஞ்சள், பயித்தமாவு, தயிரை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகம் பளபளக்க இது ஒரு சிரந்த பேஸ் பேக் ஆகும்.