போதையேற்றும் கசகசாவை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

health food kasakasa kasakasa benefits
By Nivetha Apr 20, 2022 11:57 AM GMT
Nivetha

Nivetha

Report

மேற்குலக நாடுகளில்‘பாப்பி விதை’ என்று அழைக்கப்படும் கசகசாவின் பயன்பாடு தற்போது எல்லா நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

உணவுகளில் கசகசாவுக்கு தனி இடம் உண்டு.

இது இந்தி மொழியில் 'கஸ்கஸ்' என்று அழைக்கப்படுகிறது.

அஸ்வகந்தா அதிகம் சாப்பிடாதீங்க! ஆண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுமாம்

இது பல மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையும் கூட. கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமங்களை அதிக அளவு கொண்டுள்ளது.  
போதையேற்றும் கசகசாவை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? | Kasakasa Benefits In Tamil

கசகசாவை தயாரிப்பது எப்படி?

அலங்காரத்துக்கென்று பயன்படுத்தப்படும் பாப்பி மலரின் செடி விதைகளிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது.

இந்த விதைப்பைகள் நன்றாக காயவைக்கப்பட்டு அதிலிருந்து தயாரிக்கப்படுவது தான் கசகசா.

பலரும் இது போதை பொருளாகவே பார்க்கிறார்கள். ஆனால் இவை போதை தருவதில்லை.

போதையேற்றும் கசகசாவை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? | Kasakasa Benefits In Tamil

ஆஸ்துமா நோயாளிகளின் வரப்பிரசாதம்! எப்படி சாப்பிட வேண்டும்?

விதைப்பையில் வரும் பால் ஓபியம் என்றழைக்கப்படுகிறது. இவை தான் போதை தருவனவாக இருக்கிறது.

பல நாடுகளில் கசகசாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் இதை அசைவ உணவுகளிலும் ஆண்களுக்கு வீரியம் அளிக்கும் உரமாகவும் கசகசா பயன்படுத்தப்பட்டது. 

போதையேற்றும் கசகசாவை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? | Kasakasa Benefits In Tamil

இனி நன்மைகளை பார்க்கலாம்

  1. ஆண்மை பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும்.
  2. கருப்பையில் பெலோப்பியன் குழாய்களை சுத்தம் செய்ய உதவுகிறது.
  3. கசகசாவில் செய்ய கூடிய பானத்தை அருந்தி வருவதினால் மன அழுத்த பிரச்சனை சரியாகும்.
  4. தூக்கமின்மை பிரச்சனை சரிசெய்யப்படுகின்றது.
  5. வளரும் பருவத்திலேயே கசகசாவை அவ்வபோது உணவில் சேர்த்துவருவதன் மூலம் இவை எலும்பு திசுக்களை உறுதிப்படுத்துகிறது.
  6. மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்பு, தாமிரம், கால்சியம் சத்துகள் கசகசாவில் உண்டு.
  7. கசகசாவில் இருக்கும் ஒலிக் அமிலமானது உடலில் ரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
  8. இவை தவிர தைராய்டு, வாய்ப்புண் கோளாறுகள், கண்பார்வை சீர்பட, சிறுநீரககல் தவிர்க்க, நீரிழிவு நோயாளிகள், வலி நிவாரணியாக, செரிமானத்தை எளிதாக்க என பலவகையில் பயன் தருகிறது .
  9. உணவில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுகளை கசகசா விதை எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் குறைக்கலாம்.
போதையேற்றும் கசகசாவை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? | Kasakasa Benefits In Tamil

மருத்துவம்

வாய் புண் - வாய் புண் மற்றும் வயிற்று புண்களை குணப்படுத் சிறிதளவு கசகசாவுடன், பொடித்த நாட்டு சர்க்கரை மற்றும் தேங்காய் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

அம்மை - அம்மை நோயால் ஏற்படும் தழும்பு மறைய 10 கிராம் கசகசா விதையுடன், ஒரு கைப்பிடியளவு வேப்பிலை மற்றும் ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பேஸ்டு போல் அரைத்து அம்மை தழும்புகள் உள்ள இடத்தில் பயன்படுத்தலாம்.  

      தூக்கம் - சிறிதளவு கசகசாவை பேஸ்டு போல் அரைத்து பாலுடன் சேர்த்து காய்ச்சி ஒரு கிளாஸ் தினமும் அருந்தி வர நன்றாக தூக்கம் வரும்.


      ஆண்மை - பாதாமை ஊறவைத்து தோல் உரித்து அதனுடன் கசகசா சேர்த்து அரைக்க வேண்டும். பிறகு பாலை கொதிக்க வைத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து மீண்டும் கொதிக்க விட்டு பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் ஆண்மை பிரச்சினை தீரும்.

      தலைமுடி வளர்ச்சி - ஊற வைத்த கசகசா விதைகளை புதிதாக எடுக்கப்பட்ட தேங்காய் பால், சாறுள்ள வெங்காயம் ஆகியவற்றுடன் கலந்து அரைத்து. இந்த கலவையை உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.

      பின்னர் ஒரு இலேசான ஷாம்பு கொண்டு கழுவி விடவும். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி வளர்ச்சியில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.  
      போதையேற்றும் கசகசாவை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? | Kasakasa Benefits In Tamil

      சிரங்கு மற்றும் அழற்சி - கசகசா விதைகள் சிரங்கு நோய்க்குறைபாட்டை சரி செய்ய உதவும். கசகசா விதைகளை நீர் அல்லது பால் என ஏதேனும் ஒன்றில் ஊற வைத்து, பின்னர் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து மிருதுவான பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். தோல் எரிச்சல் மற்றும் சரும அரிப்புத்தன்மையை குணப்படுத்த இந்த பேஸ்ட் உதவுகிறது.
      இது ஒரு பயனுள்ள வலி நிவாரணியாக செயல்பட்டு, சரும அழற்சி பிரச்சனைகளால் ஏற்படும் வலியை போக்க உதவுகிறது.   

      வலி நிவாரணி - கசகசா விதை வாஷ் என்பது ஒரு மருத்துவ தேநீர். இது கசகசா விதைகள் மற்றும் நீர் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது வலியில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும் ஒரு அருமையான மருந்து.

      வலியில் இருந்து விடுதலை அளித்து, கவலையை போக்கி நல்ல உறக்கத்தை வழங்க உதவுகிறது. இது ஓப்பியாயிடு போன்ற வலி நிவாரணி மருந்துகளுக்கு ஒரு நல்ல மாற்றாகும்.

      அளவுக்குமேல் பயன்படுத்தினால் உயிரையே பறித்துவிடும்

        • கசகசாவை உட்கொள்வதால் சில எதிர்மறையான பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன. கசகசா ஓப்பியம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
        • இதை சுத்திகரிக்கும்போது மிகவும் சக்தி வாய்ந்த ஒப்பியேட் மருந்துகளை உருவாக்க முடியும்.  
        • தாங்க முடியாத நீண்ட கால வலிகளுக்கு இவை மருந்தாக பயன்படுகிறது.
        • போதைக்காக தெருவோரங்களில் பயன்படுத்தும் கசகசாவில் இருந்து தயாரிக்கும் ஹெராயின் நிறைய பேரின் வாழ்க்கையை அழிக்கிறது.
        • நாம் கசகசாவை பயன்படுத்தும் போது இத்தகைய எதிர்மறையான பக்க விளைவுகளையும் கருத்தில் கொண்டு பயன்படுத்த வேண்டும்.
        • கசகசாவை மிக அதிக அளவில் உட்கொள்ளும்போது, அது நம்மை இன்னும் அதிகமாக உட்கொள்ளத்தூண்டும்.
        • இது கசகசாவின் மிக சிக்கலான பக்க விளைவாகும்.
        • ஏனெனில் ஒப்பியேட் அடிமைப் பழக்கத்தை உருவாக்கும் தன்மை கொண்டது.
        • ஒப்பியேட்டின் அளவு அதிகமாக அதிகமாக உடல் சகிப்புத்தன்மையை உண்டாக்கிக்கொள்ளும்.
        • அதனால் இன்னும் அதிகமாக உட்கொள்ளத் தூண்டும். இதனால் ஓவர் டோஸாகி அபாயமான விளைவுகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

        மருத்துவ பரிசோதனைகள்

        கசகசாவில் இருந்து அதிக சத்துகளை பெற விழையும் போது, நமக்கு தெரியாத அதன் மோசமான பக்க விளைவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

        நீங்கள் சிறிதளவு கசகசாவை சேர்த்து கொண்டு பிறகு மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்லும் போதும், அதன் முடிவுகள் சரியாக இருக்காது.

        எனவே மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்லும் போது, கசகசா சேர்த்த உணவை தவிர்ப்பது நலம்.

        போதையேற்றும் கசகசாவை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? | Kasakasa Benefits In Tamil

        குறிப்பு

        உணவோடு சேர்த்து எடுத்துகொள்ளும் போது இவை பாதுகாப்பானது.

        ஆனால் தனியாக இதை தேநீர் வடிவிலோ, நீரில் ஊறவைத்தோ குடிக்கும் போது சமயங்களில் ஒவ்வாமையை உண்டாக்கும்.

        அதே நேரம் மருத்துவரின் ஆலோசனையுடன் பரிந்துரைக்கப்பட்ட அளவு எடுத்துகொள்ளும் வரை எந்த பிரச்சனையும் இராது அளவாக எடுத்துகொண்டால் இவை ஆரோக்கியமே. ஆண்களுக்கு வீரியமிக்க பலம் தருவதும் உண்மையே.  

        2ம் ஆண்டு நினைவஞ்சலி

        நல்லூர், Epinay, France

        01 Jul, 2023
        10ம் ஆண்டு நினைவஞ்சலி

        திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

        08 Jul, 2015
        13ம் ஆண்டு நினைவஞ்சலி
        3ம் ஆண்டு நினைவஞ்சலி

        புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

        04 Jul, 2022
        மரண அறிவித்தல்

        சுழிபுரம், சுதுமலை, வவுனியா, Colombes, France

        30 Jun, 2025
        மரண அறிவித்தல்

        ஒமந்தை, Birmingham, United Kingdom

        23 Jun, 2025
        மரண அறிவித்தல்

        சரவணை கிழக்கு, நியூ யோர்க், United States, கோண்டாவில் கிழக்கு

        30 Jun, 2025
        7ம் ஆண்டு நினைவஞ்சலி
        1ம் ஆண்டு நினைவஞ்சலி

        சங்குவேலி, Chur, Switzerland

        20 Jun, 2024
        31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

        Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

        01 Jun, 2025
        10ம் ஆண்டு நினைவஞ்சலி

        ஊரெழு, கிளிநொச்சி

        01 Jul, 2015
        2ம் ஆண்டு நினைவஞ்சலி

        ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

        24 Jun, 2023
        10ம் ஆண்டு நினைவஞ்சலி

        மன்னார், Herne, Germany

        30 Jun, 2015
        மரண அறிவித்தல்

        கொக்குவில், Livry-Gargan, France

        23 Jun, 2025
        31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

        வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

        02 Jun, 2025
        1ம் ஆண்டு நினைவஞ்சலி
        31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

        பருத்தித்துறை, Montmagny, France

        31 May, 2025
        மரண அறிவித்தல்

        திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

        29 Jun, 2025
        மரண அறிவித்தல்
        13ம் ஆண்டு நினைவஞ்சலி

        புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

        29 Jun, 2012
        மரண அறிவித்தல்
        2ம் ஆண்டு நினைவஞ்சலி

        வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

        25 Jun, 2023
        38ம் ஆண்டு நினைவஞ்சலி

        மன்னார், India, புங்குடுதீவு

        30 Jun, 1987
        மரண அறிவித்தல்

        புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

        27 Jun, 2025
        மரண அறிவித்தல்
        மரண அறிவித்தல்

        வடமராட்சி, London, United Kingdom

        23 Jun, 2025
        14ம் ஆண்டு நினைவஞ்சலி

        கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

        28 Jun, 2011
        மரண அறிவித்தல்

        நவாலி, உடுவில், பிரித்தானியா, United Kingdom

        11 Jun, 2025
        மரண அறிவித்தல்

        மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

        26 Jun, 2025
        மரண அறிவித்தல்

        சரவணை கிழக்கு, Stains, France

        22 Jun, 2025
        மரண அறிவித்தல்

        யாழ்ப்பாணம், London, United Kingdom

        17 Jun, 2025
        மரண அறிவித்தல்

        அரியாலை, London, United Kingdom

        23 Jun, 2025
        1ம் ஆண்டு நினைவஞ்சலி

        புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

        01 Jul, 2024
        (+44) 20 3137 6284
        UK
        (+41) 315 282 633
        Switzerland
        (+1) 437 887 2534
        Canada
        (+33) 182 888 604
        France
        (+49) 231 2240 1053
        Germany
        (+1) 929 588 7806
        US
        (+61) 272 018 726
        Australia
        lankasri@lankasri.com
        Email US