ஆஸ்துமா நோயாளிகளின் வரப்பிரசாதம்! எப்படி சாப்பிட வேண்டும்?
Long Pepper (அ) Indian Long Pepper என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் திப்பிலி, Piperaceae குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் கொடி ஆகும்.
மூலிகைத் தாவரமான திப்பிலி பொதுவாக பழத்திற்காகவே பயிரிடப்படுகிறது, இதன் பழத்தை உலர்த்தி, மசாலா மற்றும் சுவையூட்டியாக பயன்படுத்தப்படும்.
திப்பிலி, நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், ஜாவா போன்ற நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது, இதன் மருத்துவ மற்றும் உணவு பயன்கள் குறித்து பண்டைய இந்திய ஆயுர்வேத புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
நிறைய கிளைகளுடன் அதிக உயரம் வளராமல் இரண்டு அல்லது மூன்று அடி அகலம் வரை வளரும். செடிகள் உறுதியான வேர்களைக் கொண்டிருக்கும்.
பூக்கள் மிகவும் சிறியதாகவும், இரண்டு முதல் ஐந்து செ.மீ அகவமானதாகவும் இருக்கும். இலைகள் 5 முதல் 9 செ.மீ நீளமாகவும் 3 முதல் 5 செ.மீ அகலமானதாகவும் இருக்கும்.
ஆண் மற்றும் பெண் பூக்கள் தோன்றும் காய்கள் தான் மருத்துவரீதியாகப் பயன்படுகின்றன.
திப்பிலியின் காய்களில் வெற்றிலைப் போன்ற காரத்தன்மை அடங்கியுள்ளதால் வாசனையும் இருக்கும், கருமிளகைக் காட்டிலும் திப்பிலியின் காய்களில் காரத்தன்மை மிகுந்திருக்கும்.
ஆடாதோடை இலையின் மருத்துவ பயன்கள்
மருத்துவ பயன்கள்
திப்பிலிக் காய்களில் பைப்பரின் (piperine) மற்றும் லாங்குமின் (Longumin) மருந்து வேதிப்பொருட்கள் உள்ளன.
தவிர ரெஸின், புரதம், கொழுப்பு, தாது உப்பு, சுண்ணாம்பு, இரும்பு, தையமின், நியாசின் ஆகிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
இதன் பக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் பல நோய்த்தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, இருமல், தொண்டை புண் போன்ற நுரையீரல் பிரச்சனைகளை தீர்க்கவும் செய்கிறது.
சமீபக்காலத்தில் திப்பிலியில் உள்ள வேதிப்பொருட்கள் எய்ட்ஸ் உயிர்க்கொல்லி நோய்க்கு மிகச் சிறந்த எதிர்ப்பு சக்தியைத் தருதாக கண்டறியப்பட்டுள்ளது.
உடலில் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கி நோய் மேலும் பரவுவதைத் தடுக்கின்றது. மலச்சிக்கல் தீரவும், குடல்சுத்திகரிப்பானாகவும் திப்பிலி சிறப்பாக செயல்படுகிறது.
தலைவலியை நிமிடத்தில் சரிசெய்யும் அற்புத மூலிகை! இதன் மற்ற பயன்கள் தெரியுமா?
எப்படி சாப்பிடலாம்?
* திப்பிலியை நன்கு பொடி செய்து, அதனுடன் குப்பைமேனி செடியை நிழலில் உலர்த்தி பொடி செய்து திப்பிலி பொடியுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலம் சீக்கிரம் குணமாகும்.
* கல்லீரல், மண்ணீரல் போன்ற உள்ளுருப்புகளின் வீக்கம் தீர தீப்பிலி பொடியை சாப்பிட்டு வரலாம்.
* தீர திப்பிலி பொடியை சூடான பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சீக்கிரத்திலேயே மார்பு நுரையீரலை பாதிக்கும் அனைத்து சுவாச சம்பந்தமான நோய்களை தீர்க்க முடியும்.
* திப்பிலி, சுக்கு, மிளகு போன்றவற்றை சேர்த்து கஷாயம் வைத்து சாப்பிடுவதால் காய்ச்சல் குறையும்.
* திப்பிலி ஐந்து பங்கு, தேற்றான் விதை மூன்று பங்கு சேர்த்து பொடி செய்து, அரிசி கழுவிய தண்ணீரில் கலந்து மூன்று தினங்களுக்கு தினமும் இருவேளை குடித்து வந்தால் அதிகப்படியான மாதவிடாய் காலங்களில் ரத்த போக்கை கட்டுப்படுத்த முடியும்.
* திப்பிலி பொடியை வாரம் ஒரு முறை சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு திறனையும் பலப்படுத்துகிறது.
* திப்பிலி பொடி சாப்பிடுபவர்களுக்கு கணையத்தினைத் தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு பெருமளவு நிவாரணம் அளிக்கிறது.
இளநீர் குடிப்பது நல்லதே! ஆனா இவங்க மட்டும் குடிக்க வேணாம்... இவ்ளோ தீமைகளா?
* திப்பிலிப்பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவு எடுத்து தேன்விட்டு குழைத்து 1/2 டீஸ்பூன் அளவு காலை, மாலை என இருவேளை உண்டுவந்தால் இளைப்பு நோய்நீங்கும்.
* திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்.
* திப்பிலிப் பொடியை பசுவின் பாலில் விட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வுத் தொல்லை, மூர்ச்சை, முப்பிணி நீங்கும்.
* திப்பிலியை பொடியாக்கி 1:2 விகிதம் வெல்லம் கலந்து உட்கொள்ள விந்து பெருகும், நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும்.
வாயு தொல்லையால் பெரும் அவதியா? அப்ப இந்த கஞ்சியை குடிங்க போதும்
* திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைகமறல் குணமாகும்.
* திப்பிலியை இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், கபம், வாய்வு நீங்கும், செரிமானம் அதிகரிக்கும்.