மணமணக்கும் கருவாட்டு குழம்பு - ருசிக்க ருசிக்க செய்வது எப்படி?
கருவாடு அசைவ பிரியர்கள் பலருக்கு பிடித்தமான ஒரு உணவு.
அதிலும், கருவாட்டு குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் ருசியே தனி.
இன்று நாம் சுவையான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை
- கருவாடு - 200கிராம்
- கத்தரிக்காய் - 1/4 கிலோ
- உருளைக்கிழங்கு - 2
- பச்சை மிளகாய் - 2
- தக்காளி - 2
- புளி - தேவையான அளவு
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- எண்ணெய், உப்பு - தேவியான அளவு
அரைக்க தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
- அளவு மல்லி தூள் - 50 கிராம்
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- மிளகு - 1 டீஸ்பூன்
- வரமிளகாய் - 2
- கறிவேப்பிலை - சிறிது
- பூண்டு - 4 பற்கள்
- துருவிய தேங்காய் - 1/4 கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வரமிளகாய் சேர்த்து வறுக்கவும்.
அத்துடன் அரைத்து வைத்துள்ள வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம், சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அதனை குளிர வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். அம்மியில் அரைத்தால் அதன் சுவைக் இன்னும் கூடும்.
இதனுடன் துருவிய தேங்காயையும் அரைத்துக் கொள்ளவும். பின்னர் கருவாட்டை நன்றாக சுத்தம் செய்து மீண்டும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன் பின் நறுக்கிய கத்தரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வேகவிடவும்.
இரண்டும் வெந்ததும் உப்பு சேர்த்து மேலும் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதிந்தபின் கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி கொதிக்க விடவும்.
அதன் பின்னர் கருவாட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் ருசியான கருவாட்டு குழம்பு தயார்.