ஆரோக்கியமான கரும்பு ஜூஸ் குடித்ததுண்டா?
கரும்பு வெறும் பண்டிகைக் காலங்களுக்கு தோரணமாக கட்டுவதற்கும் உண்பதற்கும் மாத்திரமல்ல. மாறாக கரும்பில் விட்டமின் ஏ,பி,சி மற்றம் நார்ச்சத்து,புரதம், ஆன்டி அக்சிடன்கள் போன்றன உள்ளடங்கியுள்ளன.
அதுமட்டுமில்லாமல் தாகத்தை தணிப்பதற்கும் கரும்புச்சாறு சிறந்த ஒன்றாக காணப்படுகிறது. இனி கரும்புச்சாறு ஏன் பருகவேண்டும் எனப் பார்ப்போம்.
செரிமானத்தை மேம்படுத்தும் - மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கும், வயிற்றில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும்.
மஞ்சள் காமாலைக்கு தீர்வாகும் - இது கல்லீரலை வலுப்படுத்தும்ஈ மஞ்சள் காமாலை நோயை நெருங்கவிடாமல் பாதுகாக்கும். இழந்த ஊட்டச்சத்துக்கள், புரதங்கள் என்பவற்றை ஈடு செய்ய உதவும்.
எலும்புகளை வலுவாக்கும் - கல்சியம், பொஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம் போன்றவை எலும்புகளை வலுவாக்க உதவும். நோய்
எதிர்ப்பு சக்தி - ஆன்டி அக்சிடன்டுகள், விட்டமின் சி நிறைந்திருந்தால் செரிமான கோளாறுகள், கல்லீரல் நோய்கள் சுவாச நோய்களுக்கு எதிராக போராடும்.
