ஆன்லைன் விமர்சனம் : துணிச்சலான கதைக்களம்... ரசிகர்களை கவர்ந்ததா ‘டோரதி’?
கார்த்திக் சுப்புராஜின் 10வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘டோரதி’ இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம், வெளியானதைத் தொடர்ந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

துணிச்சலான கதைக்கம்
முதல் பாதி கிராமத்து பின்னணியில் மெதுவாக நகர்ந்தாலும், எதார்த்தமான கதாபாத்திரங்கள் மற்றும் சுவாரஸ்யமான காட்சிகள் கவனம் ஈர்ப்பதாக விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Dorothy - a masterpiece from @karthiksubbaraj Bold and poignant. Raw and intense. Every actor has performed brilliantly. Our maestro ilayaraja sir’s background score will blow your mind away. Rudhrathandavam from isaignani. Best wishes to my dear friend Karthick subbaraj and the entire team on the release Tom. God bless.
— Dhanush (@dhanushkraja) September 24, 2026
குறிப்பாக ரிஷிகாந்த் மற்றும் சனந்தின் நடிப்பு, இளையராஜாவின் இசை மற்றும் இரண்டாம் பாதையின் எதிர்பாராத திருப்பங்கள் பாராட்டைப் பெற்றுள்ளன.
அதேநேரம், LGBTQ சமூகத்தை மையப்படுத்திய கருத்துகள் இடம்பெற்றுள்ளதுடன், மெதுவான திரைக்கதை மற்றும் கிளைமாக்ஸ் சிலருக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம் என்றும் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
@karthiksubbaraj Rishikanth’s first onscreen kiss is Sananth #Dorothy straight girls : https://t.co/YI3B2JXivM
— Shreya (@sheishreyaa) September 25, 2026
மொத்தத்தில், வழக்கமான பாணியிலிருந்து விலகி துணிச்சலான மற்றும் வித்தியாசமான முயற்சியாக ‘டோரதி’ அமைந்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |