திரையரங்க கண்ணாடியை சல்லி சல்லியாய் நொருக்கிய ரசிகர்கள்! நடந்தது என்ன?
திரையரங்கில் நடிகர் கார்த்தியை பார்க்க முயன்ற இளைஞரொருவர் அங்குள்ள கண்ணாடியை நொருக்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரமாண்ட திரைபடம் உருவாக்கம்
தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த வரலாற்று படம் தான் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தை பல கலைஞர்களை வைத்து இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார்.
கடந்த காலங்களில் இந்த திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் இடம்பெற்று வந்தது.
Image - India Today
இந்த நிலையில் இன்றைய தினம் பிரமாண்ட திரைபடத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அசல் பறக்க வைத்துள்ளது.
மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாகவும் நடித்து பட்டைய கிளப்பியுள்ளார்கள்.
Image - The India Express
ரசிகர்கள் செய்த தரமான சம்பவம்
அந்தவகையில் இன்று சென்னை - காசி திரையரங்கிற்கு நடிகர் கார்த்தி வருகை தந்துள்ளார்.
இவரை கண்டு அங்குள்ள ரசிகர்கள் அனைவரும் முண்டியடித்து கொண்டு வந்த போது திரையரங்கிலுள்ள கண்ணாடி நொருங்கியுள்ளது.
மேலும் “கார்த்தியின் மக்கள் நல மன்றம்” இந்த கண்ணாடியை சரிச் செய்து தருவதாக நிறுவாகத்திடம் கூறியுள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “என்னடா இப்படியா பண்ணுவீங்க” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சென்னை காசி திரையரங்கில் உள்ள நுழைவாயில் கண்ணாடி முற்றிலுமாக உடைந்து சேதம்.@ChennaiTraffic @chennaipolice_ @KasiTalkies @the_viralvideos #PonniyinSelvan #PonniyinSelvanFDFS pic.twitter.com/bJINEEuRIl
— TAMIL ARASAN (@TAMILAR37973811) April 28, 2023