கோலார் பாணியில் கெட்டியான சட்னி வேண்டுமா? இந்த பொருளை சேர்த்தால் போதும்
பொதுவாகவே பெரும்பாலான வீடுகளில் காலை உணவுக்கு இட்லி அல்லது தோசை செய்வது வழக்கம்.
சட்னி என்றாலே தேங்காய் சட்னி, தக்காளி சட்னி தான் முக்கிய இடத்தை பிடிக்கின்றது.சில சமயங்களில் புதினா சட்னி செய்வோம்.
எந்த வகையில் சட்னி செய்தாலும் கெட்டியாகவும் சுவையாகவும் இருந்தால் தான் அனைவருக்கும் பிடிக்கும்.
அப்படி அசத்தல் சுவையில் கெட்டி சட்னி வேண்டுமானால், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலைக் கொண்டு செய்யக்கூடிய கோலார் சட்னியை செய்து கொடுங்கள்.
வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
கர்நாடகாவின் கோலார் பகுதியில் இந்த சட்னி மிகவும் பிரபலமானது.எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 1/2 மேசைக்கரண்டி
வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
பூண்டு - 5 பல்
பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
சீரகம் - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
வரமிளகாய் - 4
புளி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் சிறிது
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் வேர்க்கடலை சேர்த்து வறுத்து, அவை இரண்டையும் ஒரு மிக்சர் ஜாரில் ஜாரில் போட்க்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெயில் பூண்டு, நறுக்கிய தக்காளி, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரையில் நன்றாக வதக்கி குளிரவிட வேண்டும்.
பின்னர் வதக்கிய பொருட்களையும் மிக்ஸி ஜாரில் உள்ள பருப்புடன் சேர்த்து, சிறிது உப்பு தூவி, தேவையான அனவுக்கு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியை ஊற்றி, சிறிது நீரை ஊற்றி கிளறி, அடுப்பை அணைத்தால், சுவையான கோலார் கெட்டி சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |