வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை “கரிசலாங்கண்ணி”
வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகையான கரிசலாங்கண்ணி, வெண்கரிசலை அல்லது கையாந்தகரை (Eclipta prostrata) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்.
இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளைக் கரிசலாங்கண்ணி.
மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிறப் பூக்களை வைத்து அடையாளம் காணலாம்.
வெள்ளைக் கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிறப் பூக்களை வைத்து அடையாளம் காணலாம்.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது ஓராண்டுத் தாவரமாகும்.
இதன் இலைச் சாறு கரிசல் நிலம் போல, கருமையான சாயத்தைக் கொடுப்பதால் இப்பெயர் பெற்றது.
அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகையான கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:
நீர்=85% மாவுப்பொருள்=9.2% புரதம்=4.4% கொழுப்பு=0.8% கால்சியம்=62 யூனிட் இரும்புத் தாது=8.9 யூனிட் பாஸ்பரஸ்=4.62%
இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள் ஆகும்.
இதன் இன்னும் பிற மருத்துவ குணங்கள் பற்றியும், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விளக்குகிறார் மருத்துவர்,