உடலின் அனைத்து நோய்களையும் விரட்ட உதவும் கரிசிலாங்கண்ணி: அவசியம் தெரிஞ்சிக்கோங்க
மூலிகையாக திகழும் இந்த கரிசிலாங்கண்ணியில் இரண்டு வகைகள் உண்டு.
ஒன்று மஞ்சள் கரிசிலாங்கண்ணி மற்றொன்று வெள்ளை கரிசிலாங்கண்ணி. இவற்றின் பூவின் நிறத்தை வைத்து இதனை வேறுபடுத்தலாம்.
இந்த மூலிகையை உணவில் எடுத்துக்கொள்வதால் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை விரட்டும். இதனை பற்றி விரிவாக பார்க்கலாம்.
மஞ்சள் கரிசிலாங்கண்ணி
மஞ்சள் கரிசிலாங்கண்ணி மஞ்சள்காமாலை, மகோதரம், வலிப்பு மற்றும் ரத்த புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தும்.
இம்மஞ்சள் கரிசலாங்கண்ணி உணவாக அல்லது மருந்தாக ஏதேனும் ஒரு வகையில் சேர்த்தால் மூளை திறன் வளம் பெரும், வயிற்றில் ஏற்படும் புண் அல்லது கட்டியை சரி செய்யும்.
மேலும் உடல் தங்கம் போன்ற பொலிவு தரும், அறிவாற்றல் வளரும். இதில் கார சுவை குறைந்து காணப்படும்.
வெள்ளை கரிசிலாங்கண்ணி
வெள்ளை கரிசாலாங்கன்னி சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான நோய்கள், ரத்தசோகை பூரணமாக குணமடையும்.
இதன் வெள்ளை நிற பூக்கள் மற்றும் இதன் கரும்பச்சை நிற இலைகள் பொதுவாக மருத்துவத்திற்கே அதிகம் பயன்படுத்துவார்கள்.
ஒரு நாளுக்கு இரண்டு முறை இளநீரில் கரிசாலாங்கன்னி சாறு கலந்து கொடுத்துவந்தால் தட்டணுக்கள் எண்ணிக்கை உயரும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
மேலும் புற்றுநோய், கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் சார்ந்த அனைத்து நோய்களை முழுமையாக குணமாக்கும்.
கரிசலாங்கண்ணி, வெட்டிவேர், கருஞ்சீரகம், நெல்லிவற்றல், செம்பருத்தி பூ, மருதாணி, அவுரிஇலை ஆகியவற்றை தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வர பித்தம் மற்றும் தலைமுடி உதிர்வு மற்றும் இளநரையையும் சரி செய்யும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |