ஆதிரைக்கு தூபம் காட்டி அலப்பறை செய்யும் கரிகாலன்- கூடி நின்று கலாய்க்கும் பிரபலங்கள்!
ஆதிரைக்கு தூபம் காட்டி அலப்பறை செய்யும் கரிகாலனின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் சத்யப்ரியா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மதுமிதா, கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் அனைவருக்கும் ஆட்டம் காண்பிக்கும் சமூக செயற்பாட்டாளராக ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் திருச்செல்வம் நடித்து வருகிறார்.
மேலும் ஆணாதிக்கம் மிக்க அண்ணன் – தம்பிகள் தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமைப் நடத்துகிறார்கள் என்பதையும் கனவுகளை தொலைத்த அவர்கள் அதிலிருந்து எப்படி மீண்டெழுகிறார்கள் என்பதையும் இந்த சீரியல் அழகாக எடுத்து காட்டுகின்றது.
முதல் இரவு இன்றி தவிக்கும் கரிகாலன்
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலுக்கு உயிர் கொடுத்த மாரிமுத்து கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனால் கரிகாலன்- ஆதிரை ஹனிமூன் பிளானும் கேன்சலாகியுள்ளது.
மாரிமுத்து இருந்தவரையில் இவர்களுக்கு எந்தவிதமான சடங்குகளும் வைக்கவில்லை.
இறப்பிற்கு பின்னர் தற்போது 1 மாதம் ஆன நிலையில் இதுவரையில் சடங்கு ஏதுவும் வைக்கவில்லை.
இதனை மற்ற சீரியல் பிரபலங்கள் விழாவில் வைத்து குற்றி காட்டி நக்கலாக பேசியுள்ளார்கள்.
அத்துடன் ஆதிரையின் தலைமுடிக்கு தூபம் காட்ட வைத்து கரிகாலனை கூடி நின்று கலாய்த்துள்ளனர். இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள் உட்பட அனைவரும் சிரித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |