கவர்ச்சியாக வந்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்...
பொதுவாக நடிகைகளின் எதிர்பார்ப்பே தான் எத்தனை வயதானாலும் அழகாக இருக்க வேண்டும் என்பதுதான். அந்த வகையில் ஹிந்தி நடிகை கரீனா கபூர் தனது திரைப் பயணத்தில் 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
தற்போது 39 வயதான அவர், தற்போதும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். அண்மையில் எவரி சைல்ட் ரீடிங் என்ற திட்டத்தின் நல்லெண்ண தூதராக கரீனா கபூர் நியமிக்கப்பட்டிருந்தார்.
எதையுமே சுறுசுறுப்பாகவும் தன்னம்பிக்கையுடனும் செய்யக்கூடியவர். கரீனா தற்போது தபு மற்றும் கிருத்தி சலோனுடன் 3 பெண்களைப் பற்றிய கதைக்களத்தை சார்ந்த படமொன்றில் நடித்து வருகிறார்.
நேற்றைய தினம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ஒரேஞ்சி நிற ஆடையில் கவர்ச்சியாக காட்சியளித்திருந்தார். அதுமட்டுமின்றி சிறிது நேரத்தின் பின்னர் மஞ்சள் நிற பேண்ட் சூட் உடையிலும் தோன்றியிருந்தார். தனது தலைமுடியை தளர்வாக வைத்திருந்தார்.
இந்த இரண்டு தோற்றங்களும் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.