திருமணத்தில் விலையுயர்ந்த ஆடை அணிந்த ஒரே ஒரு நடிகை: அப்பவே இவ்வளவு விலையா?
ஒவ்வொரு பெண்ணும் தன் திருமணத்தை பற்றி பெரிய பெரிய கனவு காண்கிறார்கள். இது ஒரு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத விடயம்.
அந்தவகையில், பொலிவூட் நடிகைகளின் திருமண ஆடைகளுக்கு மாத்திரம் எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள் தெரியுமா?
இவ்வாறு தங்களின் உடைகளின் விலைப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பது யார் இவர் தான்.
- ஐஸ்வர்யா ராய் பச்சன் (ரூ. 75 லட்சம்)
- ஷில்பா ஷெட்டி குந்த்ரா (ரூ. 50 லட்சம்)
- கரீனா கபூர் கான் (ரூ. 50 லட்சம்)
- அனுஷ்கா சர்மா கோஹ்லி (ரூ. 30 லட்சம்)
- பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் (ரூ. 17 லட்சம்)
திருமண ஆடை
இந்நிலையில், இன்று சித்தார்த் மல்ஹோத்ரா-கியாரா அத்வானி திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரத்யேகமாக தயாரான ஏழு சுற்றுகள் கொண்ட சிவப்பு நிற லெஹெங்காவை கியாரா அணிவார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் விலை இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்நேரத்தில் மற்ற பொலிவுட் நடிகைகளின் திருமண லெஹெங்காக்களின் விலையை பற்றி பேசப்பட்டு வருகிறது.
இதில் முதலிடத்தில் இருப்பவர்தான் ஐஸ்வர்யா ராய். இவரின் திருமண உடையானது ரூ.75 லட்சம் ரூபாய். அதுவும் 2007ஆம் ஆண்டில், இதனால் தான் திருமணத்தில் மிக விலை உயர்ந்த புடவை அணிந்த ஒரே ஹீரோயினாக ஐஸ்வர்யா ராய் அறியப்படுகிறார்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரின் சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் நடந்த திருமணத்தில், இந்நிகழ்வில் ஷில்பா லெஹங்கா அணியவில்லை. மாறாக சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார்.
மேலும், இன்று திருமண பந்தத்தில் இணையவுள்ள கியாரா அத்வானியின் உடை எத்தனை இலட்சம் என்பதை பார்த்துவிட்டு தான் குறித்த பட்டியலில் எந்த இடத்தைப்பிடிக்கப்போகிறார் என்பது தெரியவரும்.