தினமும் 2 இட்லி அதிகமா சாப்பிடணுமா? தக்காளி கார சட்னி இப்படி செய்து சாப்பிடலாமே!
கார சட்னி பொதுவாக தக்காளியில் தான் செய்வார்கள். இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.
தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இந்த தக்காளியை பயன்படுத்தி காரசாரமான சட்னி எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய் – 2 ஸ்பூன்
- உளுந்து – 2 ஸ்பூன்
- கடலை பருப்பு – 2 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 3
- பூண்டு – 10 பல்
- இஞ்சி – அரை இன்ச்
- வர மிளகாய் – 10
- புதினா – ஒரு கைப்பிடி
- தக்காளி – 2
- உப்பு – தேவையான அளவு
- தேங்காய் துருவல் – கால் கப்
- எண்ணெய் – ஒரு ஸ்பூன்
- கடுகு – கால் ஸ்பூன்
- உளுந்து – கால் ஸ்பூன்
- குண்டு மிளகாய் – 2
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- மல்லித்தழை – ஒரு கைப்பிடி
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் முதலில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். இதன் பின்னர் அதில் உளுந்து, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும்.
பின்னர் பெரிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். இஞ்சி, வரமிளகாய், புதினா, தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். இறுதியில் தேங்காய் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
இதை அனைத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.பின்னர் இன்னுமொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அது சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து சேர்த்து அது சிவந்தவுடன், அதில் கறிவேப்பிலை மற்றும் குண்டு மிளகாய் சேர்த்து பொரியவிட்டு சட்னியில் சேர்க்க வேண்டும்.
இதன் பின்னர் இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து எடுத்தால் காரசாரமான கமகமக கார சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |