பிரபல சீரியல் நடிகர் நள்ளிரவில் படுகொலை - பதற வைக்கும் சிசிடிவி காட்சி.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்!
கன்னட இளம் நடிகர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சதீஷ் வஜ்ரா(36). இவரின் நடிப்பால் சின்னத்திரையை அடுத்து வெள்ளித்திரையில் லகோரி என்ற திரைப்படத்தில் துணை வேடம் ஒன்றில் நடித்துள்ளார்.
எனவே திருமணமான இவர் மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
குடும்ப பிரச்சினை
இப்பிரச்சினையால் விரக்தியடைந்த மனைவி சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மறைந்த மனைவியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்கள் சதீஷின் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
அதிலும், குறிப்பாக மனைவின் தம்பி கடும் கோபத்தில் இருந்திருக்கிறார். இதனிடையே சதீஷை சந்தித்த அவர் கடந்த நாள் நள்ளிரவு கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கொலை செய்த மர்ம நபர்கள்
இதனால் படுகாயமடைந்த சதீஷ் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் நள்ளிரவு 12:30 மணியளவில் இரண்டு மர்ம நபர்கள் வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், சதீஷின் பைக்கையும் எடுத்துச் சென்றுள்ளனர். சிசிடிவியில் சேகரிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கன்னட திரையுலகினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.