காதல் மனைவியுடன் ரொமான்ஸ் நடனம்! தேனிலவில் குத்தாட்டம்- வைரலாகும் வீடியோ
சின்னத்திரையின் நட்சத்திர ஜோடிகளான நவீன்- கண்மணி முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் Reels செய்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
காதல் ஜோடியின் திருமணம்
சின்னத்திரை நாயகிகளை போன்று செய்தி வாசிப்பாளர்களும் பிரபலமடைந்து வருகின்றனர், இதற்கு உதாரணமாக அனிதா சம்பத்தை குறிப்பிடலாம்.
அந்த வரிசையில் கண்மணிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு, இவரது தமிழ் உச்சரிப்பு அழகானது.
இவருக்கும், இதயத்தை திருடாதே நாயகன் நவீனுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த மாதம் 10ம் தேதி திருமணமும் நடந்து முடிந்தது.

தேனிலவு பயணம்
இந்நிலையில் இருவரும் முதன்முறையாக தேனிலவுக்கு சென்றுள்ளனர், இதை நவீனே இன்ஸ்டாவில் வெளியிட்டார்.
அங்கிருந்தபடியே மனைவிக்கு நடனம் சொல்லிக்கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் நவீன்.
இருவரும் அழகாக ரொமான்ஸ் செய்தபடி வீடியோ வெளியிட ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
ஒருவேளையாக கண்மணிக்கு நடனம் வந்துவிட்டதே.. பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கு என்றெல்லாம் கமெண்டுகள் குவிகின்றன.