காதலியை மயக்க கங்காருவின் ஆச்சரிய ஜிம்! கலக்கல் காணொளி இதோ
சமூக ஊடகங்களில் பார்த்து ரசிக்கப்படும் வீடியோக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகின்றன. பற்பல அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் நாம் பார்க்கவே முடியாத விஷயங்களையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. அதிலும் விலங்குகளின் காதல் கதைகளும், இணையைக் கவர அவை செய்யும் முயற்சிகளும் கஷ்டங்களும் அனைவரையும் ரசிக்க வைக்கின்றன. அந்த ரசனைக்குரிய வீடியோக்கள் அனைவரையும் நெகிழ வைக்கின்றன.
இணையத்தில் வினோதமான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு பலராலும் ரசித்து பார்க்கப்படுகின்றன. அதிலும் விலங்குகளின் கசமுசா காதல், மோதல், கொஞ்சல், பிடிவாதம் என அவற்றின் மனோபாவங்களை வெளிக்காட்டும் வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டு, அவை லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளுகின்றன.
விலங்குகளின் காதலையும், ஊடலையும் பார்த்து மகிழ வாய்ப்புகளைக் கொடுக்கும் சமூக ஊடகங்களில், வித்தியாசமான வீடியோக்களில் ஒன்று கங்காருவின் காதல் வீடியோ. கங்காருவின் காதல் வீடியோ, சமூக ஊடகத்தில் தற்போது வைரலாகிறது. இந்த வீடியோ எப்படி இருக்கிறது? பார்த்துச் சொல்லுங்கள்...
kangaroo flexing muscles to attract females pic.twitter.com/RASES9lwO8
— Science girl (@gunsnrosesgirl3) February 3, 2023