சமந்தா, நாக சைதன்யா பிரிவிற்கு பாலிவுட் நடிகர் காரணமா? நடிகை கங்கனா பதிவால் ஏற்பட்ட சர்ச்சை
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்து குறித்து நடிகை கங்கனா வெளியிட்டுள்ள பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நட்சத்திர ஜோடியாக வலம்வந்த சமந்தா, நாக சைதன்யா தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளதோடு, இருவரும் அறிக்கையையும் வெளியிட்டது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நடிகை கங்கனா, சமந்தா மற்றும் நாகசைதன்யா விவாகரத்து குறித்து வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"தென்னிந்திய நடிகர் ஒருவர் நான்கு வருடங்கள் திருமண வாழ்க்கை மற்றும் பத்து வருடங்களுக்கும் மேலாக அந்த நடிகையுடன் உறவில் இருந்தார். சமீபத்தில் அவர் விவாகரத்து நிபுணர் என்று அழைக்கப்படும் பாலிவுட் நடிகர் ஒருவரை தொடர்பு கொண்டார்.
அந்த நடிகரை சந்தித்தவுடன் தான் நாக சைதன்யா விவாகரத்து முடிவை எடுத்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
கங்கனா கூறும் அந்த விவாகரத்து நிபுணர் நடிகரும் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு நட்புடன் தொடர்வதாக குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
