சிம்பிளாக நடந்த திருமணம்.. கனா காணும் காலங்கள் ஜோ மனைவி எப்படி இருக்காங்க பாருங்க
“கனா காணும் காலங்கள்” தொடரில் ஜோ கதாபாத்திரத்தில் நடித்த யுத்தன் பாலாஜி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட செய்தி புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
யுத்தன் பாலாஜி
கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தொடர் தான் “கனா காணும் காலங்கள்”.
இந்த தொடரில் நடித்த இளைஞர்கள், தற்போது பருவ வயதிற்கு வந்துள்ளனர். அதில் சிலர் திருமணம் செய்து கொண்டும் செட்டிலாகி விட்டார்கள். இன்னும் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். அதில் ஒருவர் தான் இர்ஃபான் சினிமாவில் வளர்ந்து வந்தார். ஆனால் அவர் சமீபகாலமாக திரையில் காணப்படவில்லை.
இந்த நிலையில் “கனா காணும் காலங்கள்” தொடரில் ஜோ என அழைக்கப்படும் ஜோசஃப் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் யுத்தன் பாலாஜி.
இவர், தொடரில் நண்பர்களுடன் ஜாலியாக பேசி கொண்டு, மற்றவர்களை கலாய்ப்பது, ரகளை செய்வது என இளசுகளை மனதில் இடம் பிடித்தார்.
சினிமா பயணம்
யுத்தன் பாலாஜி இந்த தொடரைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார்.
கடந்த 2009-ம் ஆண்டு வெளியான “பட்டாளம்” படத்தில் “ஜெர்ரி” என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதனை தொடர்ந்து கடந்த 2010-ல் வெளியான “காதல் சொல்ல வந்தேன்” என்ற படத்தில் நடித்த பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். அதற்கு முக்கிய காரணம் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் ஆன பாடல்கள் தான்.
அதன் பின்னர், மெய்யழகி, நகர்வலம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படங்கள் பெரிதான வரவேற்பை கொடுக்கவில்லை. அத்துடன், 2018-ல் ஓடிடியில் வெளியான “வெள்ள ராஜா” வெப்சீரிஸில் நடித்திருந்தார்.
எப்படி இருக்காரு பாருங்க
இதற்கிடையில், கடந்த 2016-ம் ஆண்டு ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமண வாழ்க்கை நீண்ட காலம் நிலைக்கவில்லை. சில காரணங்களால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.
தற்போது யுத்தன் பாலாஜி, ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்டதாக தகவல் வெளியாக நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அவரின் இரண்டாவது மனைவி பெயர் சுஜிதா என்ற தகவலும் வெளியாகியுள்ளதுடன், புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |