singapenne: மித்ராவுக்கு விழுந்த அறை- என்னை பழிவாங்காதீங்க.. கெஞ்சும் ஆனந்திக்கு தீர்வு என்ன?
ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விடயம் தெரிந்த மகேஷ், பார்ட்டியில் அனைவரும் பார்க்க மித்ராவுக்கு அறைந்து நியாயம் கேட்கிறார்.
சிங்கப்பெண்ணே
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியை காதலித்து வருகின்றனர். இவர்களில் ஆனந்தி, அன்புவை காதலிக்கிறார் என தெரிந்து கொண்ட மகேஷ் ஒதுங்கி போகிறார்.
ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விடயம் அவரின் அக்கா திருமணத்தின் போது கிராமத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. அதன் பின்னர், ஆனந்தி வேலைச் செய்யும் இடத்திலுள்ள அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஆனாலும் ஆனந்தி மீது தவறு இருக்காது என தெரிந்து அங்குள்ளவர்கள் ஆறுதலாக இருக்கிறார்கள்.
அன்புக்கும் துளசிக்கும் திருமணம் பேசி முடிவாகி அதன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் மனம் உடைந்து போன ஆனந்தி அவரின் வாழ்க்கையில் அடுத்த என்ன நடக்கும் என தெரியாமல் தவிப்பில் இருக்கிறார்.
இது ஒரு புறம் சென்றுக் கொண்டிருக்கையில் யாருக்கு ஆனந்தி கர்ப்பம் தெரியக் கூடாது என பயந்தார்களோ, அதே போன்று ஆனந்தி கர்ப்பம் மகேஷிற்கு தெரியவந்து விட்டது.
கொந்தளிக்கும் மகேஷ்
இந்த நிலையில், கடும் கோபமடைந்த மகேஷ் ஆனந்தியிடம், “நீ கர்ப்பமாக இருக்கிறாயா?” என கேட்க, ஆனந்தியும் அதற்கு “ஆம்” என தலையை ஆட்டுகிறார்.
இதற்கு அன்பு தான் காரணம் என சந்தேகித்த மகேஷ் அவருடைய வீட்டிற்கே சென்று அடித்து வீட்டிலுள்ள பொருட்களை உடைக்கிறார்.
இதனை தொடர்ந்து உண்மையை தெரிந்து கொண்டு மகேஷ் ஆனந்தியின் கர்ப்பத்தை கண்டுபிடிக்க உதவிச் செய்வாரா? என்பதை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
