எலும்புகள் பலமில்லாமல் இருக்கிறதா? உடனே இந்த உணவை செய்து சாப்பிடுங்க
பொதுவாகவே ஒரு சிலருக்கு எதை சாப்பிட்டால் எலும்புகள் பலம் இல்லாதது போல தான் இருப்பார்கள்.
அதிலும் வயது செல்ல செல்ல உடம்பு வீக் ஆகி எலும்புகள் வலுவிழந்து போகும் அப்படியானவர்கள் தினமும் கம்பு உப்புமா சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
இது நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
தேவையான பொருட்கள்
கம்பு - 1 கிண்ணம்
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 8
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கிண்ணம் கம்பை ரவை மா போல மிக்சியில் சேர்த்து அரைத்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்திரை அடுப்பில் வைத்து கம்பு மாவையும் மிதமான தீயில் வைக்க வேண்டும்.
வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் என்பவற்றை பொடிப்பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
அதன் பின் மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு , கருவேப்பிலை என்பவற்றை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
எல்லாம் வதங்கியதும் நீர் ஊற்றி நன்கு கொதித்ததும் வறுத்து வைத்திருந்த கம்பு, உப்பு சேர்த்து கிளறி எடுத்து விட்டு இறுதியில் கொத்தமல்லி தழையை தூவி விட்டு இறக்கினால் கம்பு உப்புமா தயார்.