பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்? வெளியான முக்கிய தகவல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கமல்ஹாசன் கலந்து கொள்வாரா என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதையடுத்து ஐந்தாவது சீசன் கடந்த மாதம் தொடங்கியது. தற்போது இந்த நிகழ்ச்சி 50 நாட்களுக்கு மேல் கடந்துவிட்டது.
இந்நிலையில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
அதாவது, கமல்ஹாசன் அவர்கள் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமாகிவிட்டார். இருப்பினும் டிசம்பர் 3ம் திகதி வரை தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதுடன் 4ஆம் திகதிக்கு பிறகு அவர் தனது அன்றாட பணிகளில் ஈடுபடலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து இந்த வாரம் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. சென்ற வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.