நான் தான் சினிமாவின் மூத்த Gen Z! - 67 ஆண்டுகள் சினிமா பயணம் குறித்து கமல்ஹாசன்

Kamal Haasan Tamil Cinema Viral Photos Tamil Actors
By Vinoja Aug 14, 2026 01:30 PM GMT
Report

kamalhaasan 66-years cinema journey: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன், கடந்த 1960ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். அந்த வகையில், திரைத்துறையில் நடிகராக தனது 66 ஆண்டுகளை நிறைவு செய்து, 67ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

இதையொட்டி திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கமல்ஹாசன் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் சுவாரஸ்யமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

நான் தான் சினிமாவின் மூத்த Gen Z! - 67 ஆண்டுகள் சினிமா பயணம் குறித்து கமல்ஹாசன் | Kamalhaasan Post About His 66 Years Cinema Journey

தனுஷின் அரசியல் வருகை குறித்து தீவிரமாகும் பேச்சு : பின்னணி காரணம் இதுவா!

தனுஷின் அரசியல் வருகை குறித்து தீவிரமாகும் பேச்சு : பின்னணி காரணம் இதுவா!

கமல்ஹாசன் பதிவு 

அதில் அவர், "திரைத்துறையில் எனது 67 ஆண்டுகாலப் பயணத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ஆனால், இந்த 67 ஆண்டுகளில் உண்மையான கற்றல் என்று நான் கருதுவது சுமார் 20 ஆண்டுகளை மட்டுமே" எனத் தனது பயணத்தை சுயவிமர்சனத்துடன் திரும்பிப் பார்த்துள்ளார்.

தொடர்ந்து, "மீதமுள்ள காலம், கழிவுநீர் ஓட்டத்தோடு அடித்துச் செல்லப்பட்டதைப் போன்றது. இருப்பினும், அதிலும் ஒரு நம்பிக்கை தரும் விஷயம் இருக்கிறது.

நான் தான் சினிமாவின் மூத்த Gen Z! - 67 ஆண்டுகள் சினிமா பயணம் குறித்து கமல்ஹாசன் | Kamalhaasan Post About His 66 Years Cinema Journey

அந்த நீரோட்டம் எவ்வளவு இருண்டதாக இருந்தாலும், 'கூட்டுச் சினிமா' எனும் பேராற்றலில், அதாவது எல்லையற்ற கடலில், கலப்பதற்கான காத்திருப்புதான் அது. கலைஞர்களாகவும் ரசிகர்களாகவும் நாம் அனைவரும் அந்தக் கடலை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "இத்துறையில் நான் கடந்த ஆண்டுகளை மக்கள் கணக்கிடுவதை நிறுத்திவிட்டு, வேறு இடங்களில் சிறந்த எண்களைத் தேடத் தொடங்குவதற்கு முன்பாகவே, அனுபவமாக நான் சேகரித்தவற்றை இன்னும் மேம்படுத்திக்கொள்ள முடியும் என நினைக்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

நான் தான் சினிமாவின் மூத்த Gen Z! - 67 ஆண்டுகள் சினிமா பயணம் குறித்து கமல்ஹாசன் | Kamalhaasan Post About His 66 Years Cinema Journey

மீண்டும் திரையில் இணையும் விஜய் - த்ரிஷா ஜோடி

மீண்டும் திரையில் இணையும் விஜய் - த்ரிஷா ஜோடி

திரைப்பட உலகின் நீண்ட வரலாற்றையும் தனது பயணத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துள்ள கமல்ஹாசன், 1895ஆம் ஆண்டு டிசம்பரில் லுமியர் சகோதரர்கள் முதல் பொதுத் திரைப்படக் காட்சியை நடத்தியதிலிருந்து, உலக சினிமா சுமார் 130 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

"அத்துறையின் ஒட்டுமொத்த வரலாற்றில் பாதிக்கும் மேலான காலமான 67 ஆண்டுகளை நான் கடந்துவிட்டேன் என்பதை என் குழுவினர் எனக்கு நினைவூட்டினர். இது உண்மையிலேயே வியக்க வைக்கும் விஷயம்.

ஆயினும், எனது சொந்தக் கணக்கீட்டின்படி, உண்மையான கற்றலாக நான் கருதுவது சுமார் 20 ஆண்டுகளை மட்டுமே" எனக் கூறியுள்ளார். இறுதியில், தனது வழக்கமான நகைச்சுவை கலந்த பாணியில், "ஒருவேளை, சினிமாத் துறையின் 'Gen Z' பிரிவில் நான்தான் மிக மூத்தவனாக இருப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US