நடிகர் மயில்சாமியை தொடர்ந்து கமல்பட பிரபலம் திடீர் மரணம்! சோகத்தில் திரையுலகம்
கமல் படத்தில் தொகுப்பாளராக இருந்த ஸ்ரீ ஜி ஜி கிருஷ்ணா ராவ் இன்று அதிகாலை உடல்நலக்குறைவினால் மரணமடைந்துள்ளார்.
தொகுப்பாளார் ஸ்ரீ ஜி ஜி கிருஷ்ணா ராவ்
பிரபல சினிமா படத்தொகுப்பாளரான கிருஷ்ணா ராவ் 200க்கும் மேற்பட்ட படங்களில் தொகுப்பாளராக பணியாற்றியவுடன், பழம்பெரும் டோலிவுட் இயக்குனர்களுடனும் பணியாற்றியுள்ளார்.
சினிமா மீதான அதிக ஆர்வம் கொண்ட இவர் இணை இயக்குனர் மற்றும் தயாரிப்பு வடிவடைப்பாளராக பணியாற்றினார். தெலுங்கு மட்டுமின்றி, சில இந்தி, தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களையும் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இவர் கடந்த 1983-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த சலங்கை ஒலி மற்றும் 1997-ம் ஆண்டு வெளியான ஆன ஏழுமலையான் மகிமை தமிழ்த் திரைப்படங்களிலும் பணியாற்றி வந்துள்ளார்.
தற்போது இவரது மறைவு தெலுங்கு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.