கமலின் முன்னாள் மனைவியை பார்த்ததுண்டா? 73 வயதிலும் இளமை மாறாமல் அப்படியே இருக்காங்களே
பரதக் கலைஞராக இருக்கும் கமலின் முன்னாள் மனைவியான வாணியின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வாணி கணபதி
நடிகர் கமலின் முன்னாள் மனைவியான வாணி கணபதி ஒரு நடனக் கலைஞராவார். அவருடைய மூன்று வயதில் இருந்து அவரது நடன பயிற்சியை தொடங்கினார் வாணி கணபதி.
படித்து கொண்டிருக்கும் போதே பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பரத கலையின் மூலம் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ள வாணி பெங்களூரில் சஞ்சாரி என்ற பெயரில் நடனப் பள்ளியையும் நடத்தி வருகிறார்.
இவர் கமல் ஹாசனுடன் இணைந்து மேல்நாட்டு மருமகள் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட காதல் விரைவில் திருமணத்தில் முடிந்தது.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட, வாணி கணபதியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் 73 வயதிலும் அழகு குறையாமல் இருக்கும் வாணியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |