கமல் தனது பக்கத்தில் நின்றது ஏன்? ஃபைனலில் நடந்தது இதுதான்! விக்ரமன் ஓபன் டாக்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னராக வந்த விக்ரமன் கமல் தனது பக்கத்தில் நின்றதற்கான காரணத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.
பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை கோலாகலமாக முடிந்தது. இந்த போட்டியில் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் இறுதி சுற்றுக்கு வந்தனர்.
இந்த மூவரில் அசீம் டைட்டில் வின்னராகவும், விக்ரமன் முதல் ரன்னராகவும், ஷிவின் இரண்டாவது ரன்னராக வந்தனர். அசீம் வெற்றியாளர் என்று அறிவித்துவிட்டு கமல் விக்ரமன் அருகில் நின்றது பல கேள்விகளை எழுப்பியது.
அதாவது அசீம் டைட்டில் வின்னரானது கமல்ஹாசனுக்கு விருப்பமில்லை என்றும் விக்ரமன் டைட்டில் வின்னர் வரவேண்டும் என்று நினைத்திருந்ததாகவும் இதனால் தான் விக்ரமன் அருகில் சென்று நின்றதாக கூறப்பட்டது.
விக்ரமனின் பதில் என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னராக வந்த விக்ரமனிடம் இந்த கேள்வியை எழுப்பிய போது, "அவர் அறத்தின் பக்கம் நின்றார் என்றும், இறுதி மேடையிலும் அறத்தின் பக்கம் தான் நின்றார்...
அறமே வெல்லும் என்று சொல்லிட்டு அவர் அறத்தின் பக்கம் நின்றதுடன், அவருடைய Limitations-அ வந்து நம்ம மதிக்கணும்" என பதில் அளித்து அசத்தியுள்ளார்.