அமுதவாணனுக்கு பிக்பாஸ் வைத்த ஆப்பு! சிரிப்பை அடக்கமுடியாமல் தவித்த கமல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆசையாக கேட்டால் எதையும் தராத அமுதவாணனுக்கு கேட்டதும் கொடுத்துவிட்டு வைத்த ஆப்பு உலகநாயகனை சிரிக்க வைத்துள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் அசல் வெளியேற்றப்பட்ட நிலையில். இந்த வாரம் வெளியேற இருப்பது யார் என்று தெரியாமல் மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
பொதுவாக பிக்பாஸ் வீட்டில் ஆசையாக எது கேட்டாலும் பிக்பாஸிடம் இருந்து பதில் எதுவும் வரவே வராது. அதே போன்று தனக்கும் எந்தவொரு பதிலும் வராது என்று நினைத்து தான் ஜெயிலுக்கு போவதாக கூறியுள்ளார்.
அதற்கு பிக்பாஸிடமிருந்து சரி என்ற பதில் உடனே வந்துவிட்டதாகவும், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று பிக்பாஸில் தாங்கள் கூறுவது உண்மையாகிவிட்டதாக லம்பி வருகின்றார். இதனை கேட்ட கமல் சிரிப்பை அடக்கமுடியாமல் பயங்கரமாக சிரித்துள்ளார்.