மறைந்த முன்னாள் காதலியை மறக்கமுடியாமல் தவிக்கும் கமல்... யார் அந்த நடிகை?
நடிகர் கமல்ஹாசன் தனது முன்னாள் காதலியும், மறைந்த நடிகையுமான ஸ்ரீவித்யாவைக் குறித்து காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் பேசியுள்ள பழைய காட்சி வைரலாகி வருகின்றது.
நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், தமிழ் மக்களின் உலகநாயகனாகவும் வலம் வருகின்றார். இவர் கடந்த 1978ம் ஆண்டு வணி கணபதியை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின்பு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
அதன் பின்பு மறுவருடமே நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்த நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். சரிகாவுடன் 16 வருட வாழ்க்கைக்கு பின்பு 2004ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.
பின்பு கௌதமியை காதலித்து ஒரே வீட்டில் லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்த வந்த கமல் அவரையும் 2016ம் ஆண்டு பிரிந்தார். ஆனால் கமல்ஹாசனின் மற்றொரு காதல் கதை தற்போது தெரியவந்துள்ளது.
ஸ்ரீவித்யாவுடன் காதல்
நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் ஹீரோவாக நடிக்கத்தொடங்கிய காலகட்டத்தில் அவர் நடிகை ஸ்ரீவித்யாவை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதல் திருமணத்தில் முடியாவிட்டாலும், இன்று வரை அவரை காதலித்து வருவதாக நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், தனது 19 வயதில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்கும் போதே, நான் திறமையாளர் என்று உணர்த்தியவர் ஸ்ரீவித்யா என்று கூறினார். இதனால் டிடி அவர் உங்களது தோழியா? என்று கேட்டதற்கு இல்லை எனது காதலி அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.
இதேபோல் கமல் உடனான காதல் பற்றி நடிகை ஸ்ரீவித்யா மறைவுக்கு முன் பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது. அதில், நானும் கமலும் காதலிச்சது ஒட்டுமொத்த திரையுலகுக்கே தெரியும்.
ஒரு கட்டத்தில் என் தாயார் எங்கள் இருவரையும் அழைத்து உங்கள் இருவருக்குமே நல்ல எதிர்காலம் இருக்கிறது. அதனால் இந்த காதலெல்லாம் வேண்டாம் என சொன்னார். இதனால் கமலுக்கு கோபம் வந்து அவர் என்னிடம் பேசுவதை நிறுத்தினார்.
பின்னர் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக கேள்விப்பட்ட உடன் அப்படியே உறைந்து போனேன்” என ஸ்ரீவித்யா கூறினார். நடிகை ஸ்ரீவித்யா புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 2006-ம் ஆண்டு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |