நடிகையின் முதுகில் ஓங்கி அடித்த கமல்ஹாசன் - பயந்து போன பிரபல நடிகை: வெளியான தகவல்
நடிகர் கமல்ஹாசன்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மாவில்’ அறிமுகமானார்.
வருடைய நடிப்பு ஈடுஇணையற்றது. இவரை ரசிகர்கள் ‘உலகநாயகன்’ என்று அன்போடு அழைத்து வருகின்றனர். 200க்கு மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் கமல் நடித்துள்ளார். தனது வாழ்க்கை முழுவதையும் திரைத்துறைக்கே அர்பணித்தவர். 4 முறை தேசிய விருதும், 18 முறை ஃபிலிம்ஃபேர் விருதும் கமல்ஹாசன் பெற்றுள்ளார்.
பயந்து போன நடிகை சுலோக்ஷனா
சமீபத்தில் நடிகை சுலோக்ஷனா ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில், ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் கமலுடன் இணைந்து நடித்தேன்.
அந்த படத்தில் கமலுடன் நடிக்க போகிறோம் என்ற பயத்துடனே செல்வேன். ஒரு முறை நடனக்காட்சி படமாக்கப்பட இருந்தது. நடிகர் கமல்ஹாசன் நன்றாக ஆடக்கூடியவர். ஆனால், எனக்கு ஆடவே தெரியாது.
இதைக் கேட்டதும் என்னை பயமுறுத்தினார். ஆட தெரியாது எனில் உனக்கு பிரச்சனைதான் என்று என்னிடம் கூறிவிட்டார். ஒரு கட்டத்தில் பயந்து போன நான் , படப்பிடிப்பில் ஆட சொன்னதும் உடனே அந்த நடனங்களை சரியாக ஆடிவிட்டேன். இதைப் பார்த்த கமல்ஹாசன் என் முதுகில் ஓங்கி அடித்தார்.
உனக்கு ஆட தெரியுமா? பிறகு ஏன் என்னிடம் பொய் சொன்னாய் என்று கேட்டார். இல்லை சார்... எனக்கு பரதநாட்டியம்தான் ஆட தெரியும். சினிமா டான்ஸ் எல்லாம் ஆட தெரியாது என்று சொன்னேன். இப்படி புது முக கதாநாயகிகளை பயமுறுத்துவதை வேலையாக வைத்திருந்தார் கமல் என ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் சுலோக்ஷனா.