வெறும் 20 நாட்களே... கோடிகளில் புரளும் கமல்ஹாசன்! எந்த படத்திற்கு தெரியுமா?
20 நாட்களுக்கு நடிகர் கமல்ஹாசன் கோடிகளில் சம்பளம் வாங்கவுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் இன்றும் அசைக்க முடியாத நாயகராக இருப்பவர் தான் கமல்ஹாசன். இவருக்கு “ உலக நாயகன்” என்ற பெயரும் இருக்கின்றது.
இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “விக்ரம்” திரைப்படம் நினைத்து பார்க்காத வெற்றியை தமிழ் சினிமாவிற்கு எடுத்து கொடுத்துள்ளது.
மேலும் அடுத்து இவர் நடிப்பில் “இந்தியன் 2” திரைப்படம் உருவாகி வருவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
வில்லனாகும் கமல்
இந்த நிலையில் பொலிவுட் ஸ்டார் பிரபாஸ்வுடன் இணைந்து “பான் இந்தியா” என்ற திரைப்படத்தில் நடிக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சயின்ஸ் ஃபிக்ஷன் கதையாக உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார்.
இதற்காக சுமார் 20 நாட்கள் தான் கால்ஷீட் ஒதுக்கவுள்ளாராம். அதற்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 500 கோடி ரூபாய் பட்ஜெட் என்பதால் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாம். தீபிகா படுகோன், அபிதாப் பச்சன் ஆகிய பல பிரபலங்கள் இணைந்து நடிக்கவுள்ளார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள்,“ 20 நாட்களுக்கு இவ்வளவு சம்பளமா? என வாயை பிளக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.