இரவு பார்ட்டியில் நடிகை ராதிகாவுடன் கமல் செய்த சேட்டை! வைரல் காணொளி இதோ
நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளில் வைத்த இரவு பார்ட்டியில் நடிகை ராதிகாவுடன் இணைந்து ஆட்டம் போட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் கமல்ஹாசன்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் மக்களைக் கவர்ந்த நாயகனாக வலம்வரும் கமல்ஹாசன் ஒட்டுமொத்த மக்களின் உலக நாயகனாக வலம்வருகின்றார்.
1960ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார்.
பன்முகத் திறமை கொண்ட இவர் தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய கமல்ஹாசனுக்கு அவரது உறவினர்கள் பெரும் சர்ரைஸ் அளித்திருந்தனர்.
ராதிகாவுடன் கமல் ஆட்டம்
கடந்த 8ம் தேதி தனது பிறந்தநாளுக்கு இரவு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்த கமல்ஹாசனை வாழ்த்த திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் நடிகை ராதிகாவும் கலந்து கொண்டார். அவர் கலந்து கொண்டது மட்டுமின்றி நடிகர் கமல்ஹாசனுடன் அழகாக நடனமாடியுள்ளார்.
ராதிகாவுடன் கமல்ஹாசன் நடனமாடிய காட்சி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.