பிறந்தநாளில் கமல்ஹாசனுக்கு தாயாக மாறிய அண்ணி! வைரலாகும் புகைப்படங்கள்
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் கமல்ஹாசன்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் மக்களைக் கவர்ந்த நாயகனாக வலம்வரும் கமல்ஹாசன் ஒட்டுமொத்த மக்களின் உலக நாயகனாக வலம்வருகின்றார்.
1960ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார்.
பன்முகத் திறமை கொண்ட இவர் தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்நிலையில் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய கமல்ஹாசன், அண்ணன் சாருஹாசன், அண்ணி கோமளம், அண்ணன் மகள்கள் சுகாசினி, அனுஹாசன், மணிரத்னம் என இவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.