ரெட் கார்டு கொடுக்க முடிவெடுத்த கமல்ஹாசன்... பரபரப்பான ப்ரொமோ காட்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் விதிகளை மீறி வருவதால் கடுப்பான கமல்ஹாசன் அனைவரையும் எச்சரித்துள்ளார்.
பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஷெரின் வெளியேற்றப்படுவதாக கூறப்படும் நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கடுமையாக போட்டியாளர்களை சாடியுள்ளார்.
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் விதிமீறல் அதிகமாக நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். மைக்கை மறைத்துக்கொண்டு பேசுவது, சைகை காட்டி பேசுவது, வேறு மொழிகளில் பேசுவது என தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த வாரம் கூட ஆயிஷாவும், ஷெரினாவும் மலையாளத்தில் பேசியதை சுட்டிக்காட்டி வார்னிங் கொடுத்தார். இந்த வாரம் அமுதவாணனும், ஜனனியும் கண்ஜாடையில் பேசிக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் கோபமடைந்துள்ள கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸை திட்டித்தீர்க்கும் புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. குறித்த ப்ரொமோ காட்சியில், “30 நாள் ஆகிவிட்ட நிலையில், ஒரு டாஸ்க் செய்வதற்கு அழைத்தால் தாமதமாக வருகிறீர்கள்.
அலட்சியம் வந்துவிட்டதா? ரகசியமா பேசுவதும், எழுதி காட்டுவதும், வேறு மொழிகளில் பேசுவதும் சரியல்ல. இவ்வாறு விதிகளை தொடர்ந்து அவமதித்து நடக்கிறீர்கள். தேவைப்பட்டால் நானே ரெட் கார்டு கொடுத்து எலிமினேட் பண்ண முடியும் என்று கோபமாக பேசியுள்ளார்.